பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 புலவர் கா. கோவிந்தனார்

நெய்தல் மலர்கள், அந்நீர் மறையுமளவு மலர்ந்து கிடந்தன. நெய்தல் மலரின் புற இதழ்கள், நீருண்ட கார்மேகம் போல் கறுத்துக் கவின் பெற்றிருந்தன. நெய்தலின் புற இதழ்க் கருமை, கார்மேகத்தை நினைவூட்டவே. கபிலர், அக்கார் மேகம் நீர் குடிக்கும் கடலை நோக்க, அந்நேரம், கடல்நீர் உண்டு, கருத்துக் கொண்டல் கொண்டலாக எழுந்த மேகம், கண்ணிமைக்கும் நேரத்தில் பெருமழையாகப் பெய்து ஒய்ந்தது.

மழை ஒய்ந்ததும் அவ்விடம் விட்டுப் புறப்பட்ட கபிலர், இடைவழியில், மக்கள், வயல் வளப் பெருக்கால் பசி ஒழிய வும், உணவுப் பற்றாக்குறை தீரவே பிணி ஒழியவும், பசியும், பிணியும் இல்லையாகவே அவை காரணமாய் எழும் பகை ஒழியவும் துணை செய்த, அம்மழை தரும் பெரும் பயனை எண்ணி மகிழ்ந்து, அதை வாயார வாழ்த் தும் காட்சியினைக் கண்டுகளிக்கக் கண்டு கொண்டே சென்றார்.

தலைநகர்க்குச் சிறிது சேய்மைக் கண்ணே சென்று கொண்டிருந்தபோது, கூத்தர் முதலாம் இரவலர்கள் எதிரே வந்து கொண்டிருந்தனர். அவர்கள் கால் கடுக்க நடந்து வந்திலர் மாறாக, குதிரை மீதும், குதிரை பூட்டிய தேர் மீதும் அமர்ந்தே வந்தனர். பகைவர் படை வரிசையுட் புகுந்து, அப்பகையரசரின் வாட்படை, வேற்படைகளை அழித்து இல்லையாக்கிய கொற்றம் வாய்ந்தவை என்பதைத் தம் தோற்றத்தாலேயே உணர்த்தும் அக் குதிரைகளின் பிடரி மயிர் நன்கு கத்தரித்து விடப் பட்டிருந்தது. பூட்டப் படவேண்டிய அணிகளில் ஒன்றும் குறைபடாமல் பூட்டப் பட்டிருந்த தேர்கள். -

இத்தகு பெரு வளத்தோடு வரும் அவ்விரவலர் தலைவ னாம் கூத்தனை அணுகி, வயிரியர் தலைவ! பரிசில் பொருட்களாகக், குதிரைகளும், தேர்களுமாகவே