பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலா அம் பாசறை 61

நிற்பது களிறுகளுக்கு ஒள்வாத ஒன்று. அதனால்தான் இக் களிறும் ஆங்கு நிற்க மறுத்து முரண்டுகிறது” என விளக்கம் அளித்தனர். - -

அது கேட்டு "ஏற்ற பார்ப்பாருக்கு ஈர்ங்கை நிறையப், பூவும், பொன்னும் புனல்படச் சொரிந்து...இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி வாழ்தல் வேண்டும்' (புறம்367) என்ற ஒளவையார் அறிவுரையினைக் கேட்டவன்போல், பார்ப்பார்க்குப் பொன் அணிகளைப் புனல் வார்த்துக் கொடுக்கும் பெரியோ னா கி ய செல்வக்கடுங்கோவை, அங்ங்னமே கண்டு பாராட்ட வேண்டும் என்ற ஆர்வம்

உந்த் ம்ாளிகையுள் விரைந்தார் கபிலர்.

ஆனால், அரண்மனைக்குள் புதியோர் யாரும் புகுந்து விடாவாறு காத்து நிற்கும் வாயிற்காவலன், கபிலரைத் தடுத்து நிறுத்திப், "புலவர் ஏறே! செல்வக்கடுங்கோ, அந்தணர்க்கு அருங்கலம் தருவதையும், வயிரியர்க்கு வேழமும், குதிரையும் வழங்குவதையும் சங்கு முடித்துக் கொண்டு பா ச ைற க்கு ச் சென்றுவிட்டான். காண வேண்டின், ஆங்குச் செல்வீராக’ எனக் கூறிச் செல்லும் வழியையும் விளங்க உரைத்தான். -

செல்வக் கடுங்கோவின் இச்சிறப்பெலாம் கேட்கவே, புலவர், பாசறையை விரைந்து அடைந்தார். ஆங்கு அவர் கண்டதும், கேட்டதும் அவன் கொடை வளத்தை, மாநிலத். திற்கு வளம் சுரக்கும் மாரியினும் மிகுந்து, நாட்டவர்க்கு நலம் சுரக்க வாரி வழங்கும் அவன் பெருமையினை மேலும் பெரிதாக்குவனவாய் இருந்தன.

அன்பு குறையாத சுற்றம் ஒருவனுக்கு வாய்க்குமாயின், அது, அவனுக்கு, ஒன்று பலவாகக் கிளைக்கும் செல்வம் பலவற்றைத் தரும். "விருப்பு அறாச்சுற்றம் இயையின்,