பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 புலவர் கா. கோவிந்தனார்

அருப்பு அறா ஆக்கம் பலவும் தரும்” (குறள்:522): சுற்றத்

தாரை அணைத்துக் கொண்டு, அவரோடு அளவளாவி வாழும் வாழ்க்கையை ஒருவன் இழந்து விடுவனாயின், அவன் செல்வ வாழ்வு, கரையினைப் பெறாதே நீர் நிறைந்த பெருங்குளம் போல் அழிந்தே போகும், -

"அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர் நிறைந்தற்று' (குறள்:523)

அதனால், தன் பெருஞ்சுற்றம், எப்போதும், தன்னைச் சுற்றியிருக்கும் நிலையினைப் பெறுவதே பெருஞ்செல்வம் பெற்றதன் பயன் ஆகும்.

"சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வந்தான்

பெற்றத்தால் பெற்ற பயன்” (குறள்:524). சுற்றத்தார், இடைவிடாது எப்போதும் தன்னைச் சூழ்ந் திருக்க ஒருவன் விரும்புவனாயின், அவர்கள் வேண்டுவன எல்லாம் கொடுத்தலும், அவர் மாட்டு எப்போதும் இனியனாகவே நடந்து கொள்ளுதல் வேண்டும்.

"கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய

சுற்றத்தால் சுற்றப்படும்” (குறள்:525)

என்கிறார் வள்ளுவர்.

இதனை உணர்ந்தவன் செல்வக்கடுங்கோ. அதனால் அவனைச் சூழ, அவனுடைய பெருஞ்சுற்றம் எப்போதும் பிரியாதிருப்பதையும், அவருள், பசியுடையார் எவரும் இல்ல்ாதவாறு, அவர்களை விழிப்போடு ப்ோற்றி அணைத் துக் கொண்டிருப்பதையும் கண்டு, அகமகிழ்த்து போனார் கபிலர். கடுங்கோ பால் கபிலர் கண்ட பெருமையெல்லாம் அழகிய,ஒரு பாட்டாக உருவெடுத்துவிட்டன. - -