பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

பதிற்றுப்பத்து தெளிவுரை



உண்ணாப் பைஞ்ஞிலம் பனித்துறை மண்ணி
வண்டூது பொலிதார்த் திருஞெமர் அகலத்துக்
கண்பொரு திகிரிக் கமழ்குரல் துழாஅய்
அலங்கம் செல்வன் சேவடி பரவி
நெஞ்சுமலி உவகையர் துஞ்சுபதிப் பெயர 10

மணிநிற மையிருள் அகல நிலாவிரிபு
கோடுகூடு மதியம் இயலுற் றாங்குத்
துளங்குகுடி விழுத்திணை திருத்தி முரசுகொண்டு
ஆண்கடன் இறுத்தநின் பூண்கிளர் வியன்மார்பு
கருவி வானம் தண்தளி தலைஇய 15

வடதெற்கு விலங்கி விலகுதலைத் தெழிலிய
பனிவார் விண்டு விறல்வரை யற்றே;
கடவுள் அஞ்சி வானத் திழைத்த
தூங்கெயிற் கதவம் காவல் கொண்ட
எழூஉநிவந் தன்ன பரேரெறுழ் முழவுத்தோள் 20

வெண்திரை முந்நீர் வளைஇய உலகத்து
வண்புகழ் நிறுத்த வகைசால் செல்வத்து
வண்டன் அனையைமன் நீயே! வண்டுபட
ஒலித்த கூந்தல் அறஞ்சால் கற்பின்
குழைக்குவிளக் காகிய ஒண்ணுதல் பொன்னின் 25

இழைக்குவிளக் காகிய அவ்வாங்கு உந்தி
விசும்புவழங்கு மகளி ருள்ளும் சிறந்த
செம்மீன் அனையள்நின் தொன்னகர்ச் செல்வி!
நிலனதிர்பு இரங்கல வாகி வலனேர்பு
வியன்பணை முழங்கும் வேன்மூசு அழுவத்து 30

அடங்கிய புடையல் பொலங்கழல் நோன்தாள்
ஒடுங்காத் தெவ்வர் ஊக்கறக் கடைஇப்
புறக்கொடை எறியார்நின் மறப்படை கொள்ளுநர்!
நகைவர்க்கு அரண மாகிப் பகைவர்க்குச்
சூர்நிகழ்ந் தற்றுநின் தானை! 35

போர்மிகு குருசில்நீ மாண்டனை பலவே.