பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான்காம் பத்து

137


செல்லா யோதில் சில்வளை விறலி
மலர்ந்த வேங்கையின் வயங்கிழை அணிந்து
மெல்லியல் மகளிர் எழில்நலம் சிறப்பப்
பாணர் பைம்பூ மலைய இளையர்
இன்களி வழாஅ மென்சொல் அமர்ந்து 25
நெஞ்சுமலி உவகையர் வியன்களம் வாழ்த்தத்
தோட்டி நீவாது தொடிசேர்பு நின்று
பாகர் ஏவலின் ஒண்பொறி பிசிரக்
காடுதலைக் கொண்ட நாடுகாண் அவிர்சுடர்
அழல்விடுபு மரீ இய மைந்தின் 30

தொழில்புகல் யானை நல்குவன் பலவே.

தெளிவுரை: பெருமானே! இனிதாக இசை இமிழ்தலையுடைய போர்முரசங்கள் முழக்கமிட, அவற்றைக் குறுந்தடியாலே ஓச்சி அடித்துக்கொண்டு, தோளில் புண்பட்டோரான முரசுமுழக்கும் தொழிலோர்கள், போர்க்களத்தின் முன்னணியிலே நிற்க, நின் தூசிப்படையானது காய்த்த கரந்தையும் மாக்கொடியும் படர்ந்த விளைவயலிடத்தே வந்து தங்கிற்று. ஆதலானே, நின்னுடைய தானை மறவர்கள், போரிடத்தே உண்டாகும் ஆக்கத்தை விரும்பியவராக விளங்கும் சுற்றத்தாருடனே சேர்ந்து, போர் நிகழ்த்தற்குரிய பகைவர்களின் ஊர்முனையிடத்தே சென்று, தங்காது ஒழிவாராக. இனி, எமக்கு அரணாக நின்று எம்மைக் காப்பாற்றுவார் பிறர் யாருமிலர் என்றெண்ணித் தம் உயிரைப் பேணிக் கொள்ளலை விரும்பியவராக, வெளிப்புறத்துப் பகைமறவர் எல்லாரும் தம்காவலைவிட்டு நீக்கினர். மறமாண்புடையோரால் காக்கப் பெறும் நிலைபெற்ற பகைவரது மதிலிடங்களும் போராரவார மில்லாது ஒலியவிந்து அடங்கிக் கிடக்கின்றது.

போருக்குரிய தும்பைப் பூவைக் சூடியவராகச் சென்று, வெள்ளிய பனந்தோட்டால் நிரல்படத் தொடுத்த மாலை யணிந்தவராகச் சேரவரசுக்குத் தாமே உரியவரெனக் கூறியவராக எதிர்த்த வேந்தருடைய, பிறரால் எளிதாக வெல்லுதற்கரிய போரைக் கொன்று, அவரைப் புறமிட்டு ஓடச் செய்து, அவராற் போக்கப் பெற்ற சேரநாட்டுக் காவன்