பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஐந்தாம் பத்து

147

தோன்றும் பூ. குழுஉக்குரல் - குழுமிய மயிர்க்கற்றை. பூவுடை - பூக்களையுடைய மிலைச்சல் - அணிந்து கொள்ளல். சேருற்ற - திரண்ட. செல் - பகைமேற் செல்லும். தண்டு - ஓர் படைக் சுருவி; படையணியும் ஆம். வலம் - வெற்றி. வழை - கரபுன்னை. அமல் - செறிந்துள்ள சிலம்பல் - எதிரொலி செய்தல்.

பூத்த வேங்கை பகையாதபோதும், வேங்கையென்னும் தோற்றம் பற்றி அதனைச் சிதைத்த களிற்றின் பகை முடிக்கும் வன்மைபோலத் தன்னைப் பகைத்தாரையும் தான் சிறிது ஐயுற்ற காலத்து முற்ற அழிப்பவன் செங்குட்டுவன் என்க.

அத்தன்மையான, மழை பெயலற்றதனாலே தம் தன்மை கெட்டுப்போன மூங்கில்கள், பசையற்று வளர்ந்துபோய்க் கிடக்கும் காட்டு வழிகள். அவற்றுள் ஒன்றோடு இரண்டோ அன்று; பலவற்றையும் கடந்து, திண்ணிய தேர்களையுடைய குற்றமற்ற நெடுந்தகையாகிய நின்னைக் காணற்பொருட்டாக, யானும் என் சுற்றத்தாருடன் வந்தேன்.

கழை திரங்கல் - மூங்கில்கள் பசையற்று வாடிப்போதல். அத்தம் - காட்டுவழி. வசை - குற்றம்; பழிச்சொல். தாவல் - வருந்துதல் தாவாது - தப்பாதபடி. வஞ்சினம் - நெடு மொழி: ‘இன்னது செய்யேனாயின் இன்ன குற்றமுடையவனாகுவேன்’ என்பதுபோலக் கூறுதல். ஒன்று மொழிதல் - சொல்லுதலைச் செய்யும்படி மட்டுமே சொல்லுதல். அரசுபட - அரசர்கள் பட்டுவீழ. வெவ்வர் - வெம்மையாளர். ஓச்சம் . ஆக்கம். தெவ்வர் - பகைவர். வைகார்ப்பு - ஒருகாலும் இடையுறாதே தங்கின ஆர்ப்பொலி. காலுளை - காற்றாலே வளை தலையுடைய வலம்படுகீர்த்தி - வெற்றியாலுண்டான புகழொலி. கடும்பரிப் புரவி - விரையச் செல்லலையுடைய குதிரை.

‘மறப்புலி குழுஉக் குரல் செத்து’ (7) என்பதற்கு மறத்தையுடைய புலிக்கூட்டத்தினது குரலாகக் கருதி எனவும் உரைக்கலாம். அப்போது, பாணர் கடவுளைப் பாடவும், அக்குரலைக் கேட்டுப் புலிக்குரலெனச் சினந்து வந்த களிறு, பூத்த வேங்கையின் கிளையை முறித்துத் தன் தலையிற் சூடியபடி, சுரபுன்னை செறிந்த காட்டிடத்தே பிளிறலைச் செய்திருக்கும் காட்டுவழிகள் என்க. வேங்கைமரத்தின் கிளையை ஏந்திய களிற்றுக்குத் தண்டுடை வலத்தரை உவமை கூறினார். ஒன்று மொழி மறவர் - தம் தலைவர் கூறியவாறே