பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

பதிற்றுப்பத்து தெளிவுரை

172 பதிற்றுப்பத்து தெளிவுரை

சொற்பொருளும் விளக்கமும்: களிறுகள் அசைந்தசைந்து செல்லும் இயல்பினவாதலின் அவை செல்லுதலைப் பரந்து இயல என்றனர்; போர்த் தொழிலுக்கேற்ற பயிற்சிகளால் மிகுதியும் தேர்ந்தவைபற்றிக் குதிரைகளைக் கடுமாஎன்றனர். அவற்றைச் செலுத்தும் வீரரன்றியும், அவையும் தம்செலவு வேகத்தால் மிதித்தும் கடித்தும் பகை மறவரை அழித்தலைச் சய்வன என்பதாம். தேர் திரிந்து கொட்ப' என்றது, தேர்தான் நெறியின் சால்புக் கேற்பச் சுழன்று விலகிவிலகிச் சல்வதைக் கூறியதாம்; இது நெறிதான் செம்மையற்ற நெறியென்பதையும் உணர்த்தும். பக்கப்படையைத் தாக்கி யழித்தலின் போது துணப்படை தானே ஒழிதலும், உட்படை நெருககுண்டு சிதைதலும் நேர்தலின், கைகவர் கடுந்தார்' என்றனர்: கைகலந்த போரைச் செய்யும் கடுமை யுடைய முன்னணிப் படையும் ஆம் தாரையும் போரையும் உடையவரான வேந்தரென்று பகைவரைச் சிறப்பித்து, அவரை வென்ற குட்டுவனின் மேலான வலிமையை விளக்க முற்படுகின்ருர் பரணர்.

இனிக் கைகவர் நெடுந்தார்' என்பதற்கு, மாற்ருர் படையிலே வகுத்து நிறுத்தின கைகளைச் சென்று கவருகின்ற கடிய தூசிப் படை' என்னும் பழையவுரையும் பொருத்தும். இவர் அனைவரும், கொங்கு நாட்டை வெற்றி கொள்ளக் கருதிப் படையொடு வந்தவர் என்று கொள்க. முடிவேந்தரது படைத்திரளும் வேளிரது படைத்திரளும் துணைவருதலால் மொய்வளஞ் செருக்கி மொசிந்துவந்த மோகூர்ப் பழையன் என்றும் கொள்க. இவன் வெற்றிபெறக் கருதியவன் அறுகையாவான்; இவ் அறுகை குட்டுவனின் நண்பன். மொய் . வலிமை. மொய்வளம் . படை வலிமையாகிய வளமை. இந்தச் செருக்கினலே ஏற்பட்ட களிப்பே பழையன் சேரனப் பற்றி ஆராயாதும், உரிய படை வகுப்புக்களைச் செய்து தற்காவாதும், அழிவினைத் தானே தேடுதற்குக் காரணமாயின என்பதுமாம்.

நெய்த்தோர் - குருதி. செங்கை - குருதியாற் சிவந்த கை. நிறம் படு குருதி - மார்பிற்பட்ட புண்களிலிருந்து வழி யும் குருதி இதல்ை, அவருடைய மறமாண்பும் கூறினர். அவல் - பள்ளம். படுபிணம் - பட்டு வீழ்தலாற் பிணமான மறவரின் உடல்கள் படுகண் முரசம் - ஒலிக்கும் கண்ணப் பெற்றுள்ள முரசம். நடுவண் - களத்தின் நடுவிடத்தே. பாழ் பல செய்து' என்றது பட்டு வீழும் மறவரோடு, களிறும் மரவும் தேருமாகிய பலவும் உடன் சிதைந்து வீழ்தலின்.