பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆறாம் பத்து

193

பணிந்து திறை தந்ததன் பின்னரும், அவன் கொண்ட பெருஞ் சினம் தணிந்திலது என்பதாம். குரிசில் - தலைவன். வளையினும் - சுற்றி வளைத்தவாறு செல்லினும். செல்மதி - செல்வாயாக. எழு - கணையமரம். பொன் - இரும்பு. குழூஉநிலை - குழுமிய நிலை; நிலை – வாயிற்படி. புதவு - வாயில். தேம் - வண்டினம். கைநீவி - கைகடந்து. வேங்கை வென்ற - வேங்கை மரத்தை மோதிச் சாய்த்த. பொறி - புள்ளி; வடுவு மாம். கிளர்தல் - விளங்குதல். புகர் - புள்ளி. தோட்டி யானையைச் செலுத்தும் அங்குசம்; தோட்டி காவலும் ஆம்; அப்பொழுது ’தோட்டி நீவி' என்பதற்குக் 'கோட்டைக் காவலர்களது எதிர்ப்பையும் கடந்து சென்று' எனக் கொள்க. தாங்கலாகா - தடுத்தற்கு இயலாத.

'வேங்கை வென்ற பொறிகளர் புகர்நுதல்' என்பதற்கு, 'நிறத்தால் வேங்கை மலரை வென்ற புள்ளிகள் விளங்கித் தோன்றுகின்ற நெற்றி' எனவும் கொள்வர். 'புகர் நுதல்’ வாளா பெயர் மாத்திரையாய் நின்றது எனவும் கூறுவர்.


54. நில்லாத் தானை !

துறை: காட்சி வாழ்த்து. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: நில்லாத் தானை. இதனாற் சொல்லியது: அவன் கொடைச் சிறப்பும் தம் குறையும் கூறி வாழ்த்தியவாறு

[பெயர் விளக்கம்: 'காலாள் முதலாயினவற்றைத் தர மல்ல வென்று கழித்துநின்று, யானை காணின் நில்லாது மேற்செல்லும் தானை' என்று கூறிய சிறப்பால், இப்பாட்டு இப் பெயரைப் பெற்றது.]


வள்ளியை என்றலின் காண்குவந் திசினே :
உள்ளியது முடித்தி! வாழ்கநின் கண்ணி!
வீங்கிறைத் தடைஇய அமைமருள் பணைத்தோள்
ஏந்தெழில் மழைக்கண் வனைந்துவரல் இளமுலைப்
பூந்துகில் அல்குல் தேம்பாய் கூந்தல் 5

மின்னிழை விறலியர் நின்மறம் பாட
இரவலர் புன்கண தீர நாள்தொறும்
உரைசால் நன்கலம் வரைவில் வீசி

ப.- 13