பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் பத்து

197

ஆகும் பத்து 197

நாட்டாரின் கோமானே! கொடி விளங்கும் தேரையுடைய அண்ணலே! 蟲

நின் நாட்டில் வறுமை யாதும் இல்லாமையாலே நின்னை நாடி இரந்து நிற்பவர் வாராது போயினும், ஈத்து உவக் கின்ற அந்த இன்பத்தை விரும்பியவளுகப், பிற நாட்டின் கண் உள்ளாரைத் தேரேற்றிக் கொணர்ந்து, அவர்க்கு மிகுதியான உணவைக் கொடுத்து ஆதரிக்கும், கேட்டார் மீளவும் கேட்டலை விரும்பும் வாய்மொழியினையுடைய, புகழ மைந்த தோன்றலே!

பெருமானே! அகன்ற இடத்தை உடையவரான பகை வேந்தர்கள் தம் தூசிப் படைகள் அழிந்து போதலிளுலே ஆற்ருதாராய்ப் புலம்ப, நெடிய மலைப்பக்கத்தைச் சார்ந் திருந்த அவர்தம் நாடுகளையெல்லாம் கைப்பற்றி, அதன் பின்னரே அவரைப் பொருதும் சினம் தணிந்தவளுகிய, போரை விரும்பும் ஆண்மையையும், எதிர்வந்து தடுக்கும் பகைமறவரை அழித்த ஒள்ளிய வாளையும், ஊக்கமிக்க உள்ளத்தையும் உடையவளுகிய குருசிலே!

நின்னுடைய வாழ்நாள், வேண்டிய கால அளவினுள் ளாக, யாண்டுகள் பலவாகக் கழிய, மழையைப் பெய்து உயிர்களைக் காத்துப் பின்னர் மேலோங்கிப்பறக்கும் பிசிராய்க் கழிந்து, மலையுச்சியைச் சேர்ந்த வெண்மேகத்தைப் போலச் சென்று கெடாது ஒழிவதாக, பெருமானே!

சொற்பொருளும் விளக்கமும் : ஆன்ருேள் - பெண்மை நலன் எல்லாம் அமைந்தவள்; அவள் சேரமாதேவி. சான் ருேர் - பெரியோர்: போரியல் பிறழா மறவரும் ஆம். புரவலன்-புரத்தலின் வல்லவன். க்ொற்றவன்-கொற்றத்தை உடையவன்; கொற்றம் - வெற்றி. புனரி - அலை. இரங்கும் . ஒலிக்கும். பெளவம் - கடல், வெறுக்கை - செல்வம். பந்தர் - பண்டகசாலை. துஞ்சும் - தொகுக்கப் பெற்றுக் கிடக்கும். கானல் - கானற் சோலை. படப்பை - சார்ந்துள்ள நிலப்பகுதி. பொருநன் - நெய்தல் தலைவன். முதிரை - துவரை முத லாயின. அரைத்துக் க ைர த் த ைம யி ல் செவ்வூன் தோன்ருத் தன்மையடைந்த வெள்ளிய பருப்புத் துவையல் என்பார், செவ்வூன் தோன்ரு முதிரை வெண்துவை' என்றனர். மழவர் - மழகொங்கு நாட்டார். "வாலூன் வல்சி மழவர்' என்றது, வெள்ளுனையே உணவாகக் கொள்ளும் மழவர் என்றதாலும் ஆம்; சோற்றினும் மிகுதி யாக ஊன உண்பவர் என்று கொள்க. மெய்ம்மறை