பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் பத்து

203

கரும் பத்து * 209

பகைவரை அழிக்கும் கடுஞ்சினத்தினன் எனினும் இரவலர்க்குப் பெரிதும் உதவும் அருளாளன் என்றனர், "மகளிர் துணித்த கண்' என்றது, அவன் அவரைப் பிரிந்து நெடுங்காலம் பாசறையிடத்தானுக இருத்தலால். அவர் துயர் தீர்க்க உடனே மீள்தலினும், இரவலர்க்குற் ற் வறுமைத் துயரைத் துடைக்கவே விரைபவன் என்றனர். கடுமை, காதன்மை, அருளுடைமை என்னும் மூன்ருனும் சிறந்தோன் சேரலாதன் என்பதாம். -

மெல்லிய வகுந்த என்றது, வழிதானும் கடுமையற்றது அதஞல் எளிதே செல்லலாம் எனக் கூறியதாம்.

58. ஏவிளங்கு தடக்கை ! துறை : செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர் : 7விளங்கு தடக்கை. இதனுற் சொல்லியது : சேரனின் செல்வ0 பெருக்க மும் கொடைச் சிறப்பும்.

ஆடுக விறலியர்; பாடுக பரிசிலர்: வெண்தோட்டு அசைத்த ஒண்பூங் குவளையர் வாள்முகம் பொறித்த மாண்வரி யாக்கையர் செல்லுறழ் மறவர்தம் கொல்படைத் நரீஇயர் இன்றினிது நுகர்ந்தன மாயின் நாளை 5 மண்புனை இஞ்சி மதில்கடந் தல்லது உண்குவம் அல்லேம் புகாவெனக் கூறிக் கண்ணி கண்ணிய வயவர் பெருமகன் பொய்படுபு அறியா வயங்குசெந் நாவின் எயிலெறி வல்வில் ஏவிளங்கு தடக்கை 10 ஏந்தெழில் ஆத்துச் சான்ருேர் மெய்ம்மறை வான வரம்பன் என்ப கானத்துக் கறங்கிசைச் சிதடி பொரியரைப் பொருந்திய சிறியிலை வேலம் பெரிய தோன்றும் புன்புலம் வித்தும் வன்கை வினைஞர் 15

சீருடைப் பல்பகடு ஒலிப்பப் பூட்டி நாஞ்சில் ஆடிய கொழுவழி மருங்கின்