பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆறாம் பத்து

209

வாழ்தல். உலகம் - தன் நாட்டின் உயிரினங்கள். தாங்கிய - பேணிக் காத்த. கற்பு - கற்பன கற்றறிந்த அறிவுத் திறன். மெய்ம்மறை - கவசம். வில்லோர்-வில்லாளர். வீறு - தனிச் சிறப்பு. இரும் - பெரிய. கொற்றம் - வெற்றி. செல்வர் - செல்வமுடையோர்; அரசர். அரணம் - பாதுகாப்பு - ஞாயிறு தோன்றியதும் இருளும் குளிரும் அகன்றுபோக, உயிரினம் மீளவும் நலமுற்றாற் போலச்சேரலாதன் தோன்றியதும் இரவலர் சிறுமை கெட்டு அவரும் பெருங்குடியினராயினர் என்பதாம்; இதனால், அவன் கொடைச் சிறப்புக் கூறப் பெற்றது.

'பல்வேறு வகைய நனந்தலை' என்றது, பலவகைப்பட்ட அகன்ற நாடுகளை; இவை மொழிவேறுபட்ட பலவகை நாடுகளையும் குறிப்பதாகலாம். பண்ணியம் - பண்டங்கள். பகுக்கும் ஆறு - மக்களுக்குப் பகுத்தளிக்கும் முறைமை, முட்டு - குறைவு. அறம்புரிந்து ஒழுகல் - செங்கோன்மை நடாத்தி வாழ்தல். நாடல் - ஆராய்தல். துப்பு - வலிமை. பணைத்தோள் - பெருத்த தோள். பாடுசால் - பெருமை மிகுந்த. கலம் - அணிகலன். 'தரூஉம் நாடு' என்றது, திறையளக்கும் நாடுகளை. புறந்தருதல் - காத்தல்; அவையும் வளமும் அமைதியும் உடையவாமாறு செய்து உதவுதல். 'மார்' - அசை.

அறியாது - தம் வலியும் நின் வலியும் ஆய்ந்தறியாது. துப்பு - வலிமை. துப்பில் குறையுற்று - களத்தில் தோற்றதனால், முன்னிருந்த வலிமையும் கெட்டுப்போய்க் குறைபாடு அடைந்து. தணிமோ - தணிவாயாக. இதனாற் போரில் தோற்றுப் பணிந்தோரையும காத்துப் பேணுதலான கடமையினை வலியுறுத்தினர்.


60. மரம்படு தீங்கனி !

துறை: விறலியாற்றுப் படை. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: மரம்படு தீங்கனி. இதனாற் சொல்லியது: கொடைச்சிறப்பும் வென்றிச்சிறப்பும்.

[பெயர் விளக்கம்: 'புறத்து வன்மையால் அரிவாளும் போழமாட்டாத தீங்கனி’ என்பவற்றுள், புல்லின் வகையினவாகிய பனை முதலியவற்றின் தீங்கனியை நீக்குதற்கு, ’மரம் படுகனி' என்று கூறிப், ’பலாப்பழம்' என்று பெயர் வைத்த சிறப்பால், இப்பாட்டு இப்பெயர் பெற்றது.]ப. -14