பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222

பதிற்றுப்பத்து தெளிவுரை

எரித்தொழிக்கப் புகும் கூற்றத்திற்கு ஒப்பாக்கினர். வாழியாதனின் பசையழிக்கும் கடுந்திறலின் கொடிய தன்மைக்குப் 'பசும்பிசிர் ஒள்ளழல் ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர் திகழ்பு, ஒல்லா மயலொடு பாடிமிழ்பு இழிதரும் மடங்கல் வண்ணங்கொண்டு எழுதலை' உவமையாகக் கூறினராகவும் கொள்ளலாம். அதுதான் எதிரிட்ட அனைத்தையுமே அழித்துத் தானே எங்கணும் வெம்மையோடு மேலோங்கி நிற்றலைப்போல, வாழியாதனும் எதிரிட்ட பகைப்படையனைத்தையும் அழித்துத் தானே எப்புறத்தும் மேலோங்கி நிற்கவல்ல கடும் போர்த்திறலினை உடையவன் என்பதாம். துப்பு - வலிமை. கொற்றம் - வெற்றி. சுவல் - பிடரிமயிர்; அது கொய்யப் பெற்று ஒழுங்குபடுத்தப் பெறுதலின் 'கொய்சுவல்' என்றனர்; இன்றும் இவ்வாறு கொய்து அழகுபடுத்துதல் மரபு.

'புனல் பொரு கிடங்கு' என்றது அகழியின் நிர்ப் பெருக்கையும் அகலத்தையும் உணர்த்தும்; அதனாலேயே அதன்பால் அலையெழுந்து கரையை மோதிப் பொருதியபடி இருந்ததென்று கொள்க. அணங்குறுத்தற்கு ஏதுவான பெருவலியினை ’அணங்கு' என்றனர். தோட்டி செப்பல் - தோட்டி போல உடலை வளைத்துப் பணிந்தவராகப் பணிவான சொற்களை மொழிதல். அவர் படைச் செருக்கு அழிந்து போக, உயிரைப் பேணும் கருத்தினராக அஞ்சிப் பணிந்து வாழமுற்பட்டுத் தொழுதுநின்ற நிலை இது.

'பகைவர் பணிந்து திறையளப்பின், அவர் நாடு புலவர் பாடும் புகழுடைய பெருவளத்தினதாகும்' என்றனர். இன்றே இதுதான் அழிந்து பாழ்படும் என்பது தேற்றம். ’வளனுடைச் செறு’ என்றது, வயல்களின். வளமான நெற்பயிரின் தன்மை தோன்றக் கூறியதாகும். ’விளைந்தவை உதிர்ந்த களனறு குப்பை' என்றது. உரியவர் கதிரறுத்துப் போயினபின், வயல்களிற் சிதறிக் கிடக்கும் நெல்மணிகளை. இவற்றைத் துடைப்பத்தால் பெருக்கிச் சேர்த்து, ஆநிரை மேய்ப்பாரும் பிறரும் கள்ளுக்கு விலையாக தந்து கள்ளுண்டு களிப்பர் என்பதாம். இதனால், அந்நாட்டின் விளைவு மிகுதி பற்றிக் கூறினர். அரியல் - கள். ’வன்கை வினைஞர்' என்றது, உதிர்ந்த மணிகளைத் தொகுத்தற்கு எடுத்துக்கொள்ளு கடுமையான உடல் உழைப்பைக் குறித்துக் கூறியதாம். பாடல்சான்ற - புலவர் பாடும் புகழ் பெற்றன. அவர்தாம் தம் நாட்டினை இத்தகைய வளமுடைய