பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/254

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

250

பதிற்றுப்பத்து தெளிவுரை


பெருங்களிற்று யானையொடு அருங்கலம் தரா அர் மெய்பணி கூரா அனங்கெனப் பராவலின்
பலிகொண்டு பெயரும் பாசம் போலத்
திறைகொண்டு பெயர்தி வாழ்கநின் ஊழி!
உரவரும் மடவரும் அறிவுதெரிகந் தெண்ணி

25

அறிந்தனை அருளா யாயின்
யாரிவண் நெடுந்தமை வாழு மோரே?

தெளிவுரை : பெருமானே! இடையறுதலில்லாத புது வருவாயினையுடையதும், அகன்ற இடப்பரப்பை உடையதுமான வயலிலுள்ள நெற்கதிரோடு, அரிய பூக்களைக்கொண்ட ஆம்பலையும் நெய்தலையும் ஒருசேரச் சேர்த்து, வயல்வேலை செய்யும் மகளிர் அரிவர். அங்ஙணம் அரிந்த கதிர்கள் வயலை அடுத்துள்ள களத்திலே மிகுதியாகச் சேர்ந்திருக்கும். அவற்றைப் பெரும் பகடுகொண்டு மிதிப்பித்து, மென்மையான செந்நெல்லைப் பிரித்து எடுப்பர். அந் நெல்லைத் தூற்றிப் பொலியிட்டு மரக்காலால் அளந்து அம்பாரமாகக் குவித்து வைப்பர். அங்ஙணம் விளங்கும் செந்நெல்லின் அம்பாரக் குவியலைப்போலக் கடுமையாகக் கொட்டும் இயல்பினையுடைய செங்குளவிக் கூட்டம் மொய்த்திருக்கும் கூடு தொங்கும். நின்னோடு மாறுபட்டு நின்னைச் சின்ங்கொள்ளச் செய்த பகைவர்கள், அச் செங்குளவிகளின் கூட்டைக் கலைத்த இளஞ்சிறார்கள் அவற்றால் வெருட்டி வெருட்டிக் கொட்டப்பட்டுத் துன்புற்றாற் போலத், தாமும் நின்மறவராலே தாக்கப் பெற்றுத் துன்பமுற்றனர்.

ஆயர் குடியினரின் தலைவன் கழுவுள் என்பவன். அவனுக்கு உரியதான ஊரினை எரியூட்டி அழித்தாய். அத்தீயானது ஊரைச் சுற்றிச் சூழ்ந்து, அங்கிருந்த நெற்போர்களையும் சுட்டெரித்தது.அதனின்றும் எழுந்த புகையானது நாற்றிசைகளையும் மூடி மறைத்தது. அக் கழுவுளும் அவனைச் சார்ந்தோரும் கோட்டையுட் சென்று அடைத்துக் கிடந்தாராய், வெளிவந்து போரிடலைச் செய்யாது, தம் பழியான சூழ்ச்சிச் செயல்களைப் பற்றியே முயற்சிகள் செய்தவாறிருந்தனர். ஆழமான இடத்தையுடைய அகழியாற் குழப்பெற்றதும், குறுகிய படிகளைக் கொண்டதுமான ஞாயில் என்னும் உறுப்பையுடைய அவ்வரிய, மதிலின் காவலையழித்து, நீயும் அதனைக் கைப்பற்றிக் கொண்டனை. அவ்விடத்தேயுள்ள