பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/255

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

எட்டாம் பத்து

251


எருதுகளோடு கன்றுகளையுடைய பசுக்களையும் கைப்பற்றி நின் படைமறவர்க்குத் தந்தனை. அவற்றைப் பெற்ற அவரும் நின்னைப் போலவே தாமும் கொடுத்தலில் விருப்பம் மிகுந்தவராகப், புலால் நாற்றம் கமழும் வில்லினையுடையராகி அம்மறவர்கள், அவற்றைத் தாமும் தம்பால் வந்திரந்தோருக்கு வழங்கி மகிழ்ந்தனர். கோட்டையினின்றும் தப்பிச்சென்ற, பகக்களின் பால் தயிர் மோர் நெய் முதலிய பயனைக் கொண்டு வாழும் ஆயர்களின் தலைவனகிய அக் கழுவுள்: தன்னைச் சார்ந்தவர் வீடுகளிலே தயிர்கடையும் மத்தின் கயிறு ஆடுதலற்று விளங்கும் காலைப்பொழுதை நினைந்தான். தன் பகைமையைக் கைவிட்டு, நின்முன் வந்து பணிந்து தலைவனங்கியும் நின்றான்.

கழுவுள் அவ்வாறு வண்ங்கவும், நீதான் அவன் தந்த இறைப்பொருளை ஏற்று அவன் ஊரைவிட்டு நின்னைப்பகைத்த வேறு அரசர்களின் நாடுகளை நோக்கிச் சென்று, அவர் ஊர்களையும் பாழாக்கினாய். புதிதாகத் தாம் சேர்த்துள்ள செல்வத்தோடு முன்னோர் சேர்த்து வைத்துள்ள பெருஞ்செல்வமும் எல்லாம் இனி அழிந்தே போயின எனக்கருதி அவர்கள் அஞ்சினர். அரிதான போரிடையே தாங்குதற்கரிய நிலையையும் தாங்கியபடி உறுதியோடு நின்றதும், புள்ளிகள் பொருந்திய நெற்றியை உடையதுமான பெருங்களிற்று யானையோடு, தம்மிடமுள்ள அருங்கலன்களையும் நினக்குத் தாரார் ஆயினர் அவர். எனினும், உடல் நடுக்கமுற்றவராக, நின்னைத் தம்மைத் தாக்கி வருத்துதற் பொருட்டு வந்த தெய்வமாகக் கொண்டு, தம்மைக் காத்தருளுமாறு வேண்டிப் பரவினர். தனக்கிட்ட பலியை ஏற்றுக்கொண்டு, அவருயிரை வருத்தாது அவ்விடம் விட்டு அகன்றுபோகும் பேயினைப் போல, நீயும் அவர் பணிந்து தந்த திறைப்பொருளை ஏற்றுக் கொண்டு, அவர் நாட்டைவிட்டு அகன்று செல்வாய். நெடுந்தகையே! நின் வாழ்நாள் வாழ்வதாக அறிவாளரையும் மடமையாளரையும் தெரிந்து, அவர்தம் அறிவின் தரத்தை ஆராய்ந்து அறிந்தாயாகி, அவரவர்க்குத் தகுந்தவாறு அருள் செய்யாதே, அனைவருக்கும் ஒருப்போலவே அருள் செய்வாயானால், இவ்வுலகிலே யார்தாம் பரிசில் வாழ்க்கையினராக வாழ்வோராக இருப்பார்கள்! இதனால், அவரவர் தகுதியறிந்து, அவரவர்க்கு ஏற்றவாறு வழங்குக. பெருமானே!

சொற்பொருளும் விளக்கமும் : அறாஅ யாணர் - இடையராத புதுவருவாய்; அது இடையில் தீய்வுற்றுப் போகாதே