பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

256

பதிற்றுப்பத்து தெளிவுரை


73. நிறம்திகழ் பாசிழை !

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகுவண்ணம். தூக்கு: செந்தூக்கு. சொல்லியது: பெருஞ்சேரலின் வெற்றிக்கு அடிப்படையாகிய செல்வமும் ஆண்மையும் கைவண்மையும் ஒருங்கே கூறியவாற்றான் அவன் வெற்றிச் சிறப்புக் கூறப்பட்டது.

[பெயர் விளக்கம்: தன்னின் அழுத்திய மணியினும் தன் நிறம் திகழும் பசும்பொன் இழை என்று கூறிய சிறப்பானே இதற்கு இப்பெயர் ஆயிற்று; இதில் வரும் 3,4 ஆம் அடிகள் கிடைக்கவில்லை.]


உரவோர் எண்ணினும் மடவோர் எண்ணினும்
பிறர்க்குநீ வாயின் அல்லது நினக்குப்
பிறர் உவமம் ஆகா ஒருபெரு வேந்தே!
…………… கூந்தல் ஒண்ணுதல் பொலிந்த
நிறந்திகழ் பாசிழை உயர்திணை மகளிரும்
தெய்வந் தரூஉ நெஞ்சத் தான்றோர்

………………………………………………………………….
மருதஞ் சான்ற மலர்தலை விளைவயல்
செய்யுள் நாரை ஓய்யும் மகளிர்
இரவும் பகலும் பாசிழை களையார் 10

குறும்பல் யாணர்க் குரவை அயரும்
காவிரி மண்டிய சேய்விரி வனப்பின்
புகாஅர்ச் செல்வ! பூழியர் மெய்ம்மறை!
கழைவிரிந்து எழுதரும் மழைதவழ் நெடுங்கோட்டுக்
கொல்லிப் பொருந! கொடித்தேர்ப் பொறைய! நின் 15

வளனும் ஆண்மையும் கைவண் மையும்
மாந்தர் அளவிறந் தனவெனப் பல்நாள்
யான்சென் றுரைப்பவும் தேறார் பிறரும்
சான்றோர் உரைப்பத் தெளிகுவர் கொல்என
ஆங்குமதி மருளக் காண்குவல் 20

யாங்குரைப் பேனென வருந்துவல் யானே!

தெளிவுரை: அறிவுடையோர் எண்ணினாலும், மடமை உடையோர் எண்ணினாலும், பிறருக்கு நீதான் உவமமாக