பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எட்டாம் பத்து

273

யானது பலிபீடத்தின்மேல் வீழ்ந்தால் அல்லது, தனக்கிட்ட படையலை ஏற்றுக்கொள்ளாதவளும், அஞ்சத்தக்க இயல்பினையுடைய கடவுளுமான அயிரைமலையிலுள்ள கொற்றவைக்கு நின் மறவர் பலியூட்டுச் செய்வர். அத்தகைய கொற்றவையாள் வாழ்கின்ற அயிரை மலையைப்போல, நின் புகழும் என்றும் அழியாதாகி நிலைபெறுக, பெருமானே!

சொற்பொருளும் விளக்கமும்: செருவத்து - போர்க் களத்து. கொடை -கொடுத்தலாற் குறைபடும் செல்வம். பெரியோர் - வயதின் முதியோர். அளித்தி-அருள் செய்வாய். நல்லிசை – நற்புகழ். நசை - விருப்பம். வயங்குதல்- விளங்குதல்; செந்நா - செல்விய நா; அஃதாவது வாய்மையே பேசும் நா. படியோர் - படியாதாரான பகைவர். கொடியோர் - வளையணிந்த மகளிர்; என்றது அவன் தேவியை. கோதை - மாலை. 'குரை': அசைநிலை. 'வாரார்': முற்றெச்சம். நிலத்து - நாட்டில். எருத்தம் பிடரி. புல்லென - பொலிவற்றுப் போக.குலை-நாண். கோலின் வாரா - செங்கோன்மைக்கண் உட்பட்டு வாராத. கண் - அடிக்குமிடம். போழ்ந்து - கிழித்து. அரசுவா - பட்டத்து யானை. அழைப்ப - வருத்தத்தாற் கதற. கோடு - கொம்பு. அணங்கு - தெய்வத் தன்மை. உயக்கம் - சோர்வு. நிறம் - மார்பு. புறம் - படையலின் மேற்பக்கம். மடை - படையல்; சமைத்த சோறு. எதிர்கொள்ளா - ஏற்றுக்கொள்ளாத. கடவுள் - அயிரை மலையிலுள்ள கொற்றவை. அயிரை - அயிரை மலை; இதனை ஐவர் மலை என்பர் இந்நாளில். 'நின் புகழ் கேடிலவாக' என்றது, 'நீயும் கேடற்று நெடிது வாழ்க' என்றதாம்.


80. புண்ணுடை எறுழ்த்தோள்!

துறை:வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகுவண்ணம். தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும். [பெயர் விளக்கம்: எப்பொழுதும் பொருது புண் அறாத வலிய தோள் என்ற சிறப்பால், இப்பெயர் இப் பாட்டிற்கு அமைந்தது.]ப. - 18