பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒன்பதாம் பத்து

285

தாவில் - வலியற்ற. மள்ளர் - போர் மறவர். தொல் மருங்கு - பழையதாக வரும் தம் குலம். அரண் கொண்டு - அரணிடத்துப் புகுந்திருத்தலை மேற்கொண்டு. 'துஞ்சா வேந்தர்’ என்றது, பகையரசரை. விருந்து - புதியவின்பம்; இதுபிரிவால் வாடியிருந்தாளைச் சென்று தழுவுதலால் உண்டாவது. இஃது, அவன் அரிவையான சேரமாதேவியின் கற்பு முல்லை பற்றி வந்தது; இதனால் துறை முல்லை ஆயிற்று என்பது பழைய உரைக் குறிப்பு.


82. வினைநவில் யானை !

துறை:காட்சி வாழ்த்து. வண்ணம்: ஒழுகு வண்ணமும், சொற்சீர் வண்ணமும். தூக்கு: செந்தூக்கு. பெயர்: வினைநவில் யானை. இதனாற் சொல்லியது: இளஞ்சேரலின் வென்றிச் சிறப்பு.

[பெயர் விளக்கம்: 'நின்னைக் காண்கு வந்திசின்' என்று கூறி வாழ்த்துதலால் காட்சி வாழ்த்து ஆயிற்று. 'முன்னே போர்வினை செய்து பழகின யானை' எனவும், 'முன்னின்ற செல்சமஞ் தொலைத்த யானை’ எனவும் கூறிய சிறப்பால் இப்பெயர் வந்தது.]



பகை பெருமையின் தெய்வஞ் செப்ப
ஆரிறை யஞ்சா வெருவரு கட்டூர்ப்
பல்கொடி நுடங்கும் முன்பின் செறுநர்
செல்சமந் தொலைந்த வினைநவில் யானை
கடாஅம் வார்ந்து கடுஞ்சினம் பொத்தி 5

வண்டுபடு சென்னிய பிடிபுணர்ந் தியல
மறவர் மறல மாப்படை யுறுப்பத்
தேர்கொடி நுடங்கத் தோல்புடை யார்ப்பக்
காடுகை காய்த்திய நீடுநாள் இருக்கை
இன்ன வைகல் பன்னா ளாக

பாடிக் காண்கு வந்திசின் பெரும!
பாடுநர், கொளம்கொளக் குறையாச் செல்வத்துச்செற்றோர்
கொலக்கொலக் குறையாத் தானைச் சான்றேர்