பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

288

பதிற்றுப்பத்து தெளிவுரை


போரருங் கடுஞ்சினம் எதிர்ந்து
மாறுகொள் வேந்தர் பாசறை யோர்க்கே!.


தெளிவுரை: கார்மேகங்களின் முன்பாக ஒழுங்கு குலைந்தவாய் எழுந்து செல்லும், வெண்ணிறச் சிறகுகளையுடைய பறவைகளின் நெடிய வரிசையைப் போலப், போரிற் பகைவரைக் கொல்லும் களிறுகள் நெருங்கிய, பலவகைக் கேடகங்களைத் தாங்கிய மறவரின் கூட்டத்தோடு, செல்லும் நெடுந்தேர்களின் மீது விளங்கும் அசைந்தாடும் கொடிகள் விளக்க முடையவாக அழகுடன் தோன்ற, நீ செல்லும் படைச்செலவு நின்னைக் காண்பவர்க்குப் பெரிதும் இனிதாவ தேயாகும், ஆனால், அதுதான்- பலவகை மாண்புகளையும் கொண்ட பகைநாடுகள் கெடுமாறு அழித்து, அவர் நாட்டு நன்கலங்களையும் கவர்ந்து தரூஉம் நின் போர்ச்செலவாகிய தடுத்தற்கரிய சினத்தின் செயலாதலால், நின்னை எதிர்த்தாராக, நினக்கு மாறுபாடு கொள்ளும் வேந்தரது பாசறைக்கண் உள்ளாரான பகை மறவர்க்குத் துன்பந் தருவதாயிருக்கும் பெருமானே! இது தான் என்னையோ?

சொற்பொருளும் விளக்கமும்: கிடுகேந்திய வீரர் கூட்டத்தோடு செல்லும் களிற்றின் தொகுதிகளைக் கார் மேகத்தின் தன்மைக்கு ஒப்பிட்டனர். கிடுகுகளின் தொகுதியும் களிறுகளும் செல்வது அலையலையாகக் கார்மேகம் வானிற் செல்வதுபோல நிறைந்திருந்தன என்க. அவற்றுக்கு முற்பட்டுச் செல்லும் தேர்களின் வரிசைகளைக் கார்மேகங்களுக்கு முன்னாக வளைவுவளைவான வரிசையோடு செல்லும் பறவைகளின் செலவுக்கு ஒப்பிடுகின்றனர்.

கார் மழை - கார்மேகம்; கார்காலத்து மழைமேகமும் ஆம். கைபரிதல் - ஒழுங்கு குலைதல். எழுதரும் - செல்லும். வான்பறை - வெண்சிறகு. குருகு - கடற்குருகு; கொக்கினத்துள் ஒன்று. நெடுவரி - நெடிய வரிசை. பொற்ப - ஒப்பாகத் தோன்ற. தோல் - கேடகம்: இதன் நிறம் கருப்பு என்பது இதனால் விளங்குதலால், இருப்புத் தகடாற் செய்யப்பெற்றதாகலாம்; தொடக்ககாலத்தில் தோற்கேடகங்களே வழக்கிலிருந்ததனால் ’தோல்' என்று பெயரையும் இது பெற்றிருக்கலாம். மிடைதல் -நெருங்கல்; களிறுகளும் கிடுகுடைப் படைமறவரும் நெருங்கிச்சென்றனர் என்பதாம். நெருக்கம் திரளின் மிகுதியினால் ஏற்பட்டது என்க. அவிர்வர - ஒளி