பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

302

பதிற்றுப்பத்து தெளிவுரை

வருதல். பெரியோர் - குலத்து முன்னோரான பெருவேந்தரை. உளை - பிடரிமயிர். அரிமான் - சிங்கம். குருசில் - தலைவன்.

விரவுப்பணை முழங்கும் - பல்வேறான முரசங்களும் கலந்து ஒலிக்கும். தோல் - கிடுகு; அதனை ஏந்தி நிற்பாரான வீரரைக் குறிக்கும்.உரவு வலிமை. நுடங்கும் - அசைந்தாடும். பாசறை - கட்டூர். அலைத்த- வருத்திய காலுதல் - கக்குதல். கல்கால் கவணை - கற்களைக் கக்குமாறுபோலத் தொடர்ந்து எறிந்தபடியிருக்கும் கவணை என்னும் கல்லெறி பொறி, நார் - பன்னாடை. நறவு - கள். உடலுநர் -பகைத்தோர். தடித்த - அழித்த; வெட்டி வீழ்த்திய பொலம் - பொன். வளை - சங்கம். வளைகடல் முழவு- வளைகளைக் கொண்ட கடலின் முழவுபோன்ற ஒலி முழக்கம். தொண்டி- தொண்டிப் பட்டினம். துவைத்தல் - ஆரவாரித்தல். தும்பை. தும்பைப் போர்; இருபெரு வேந்தரும் புகழ் கருதிப் போராடும் போர். நனவுற்று - நனவிலே வந்து தோன்றி. மாற்றரும் - நீக்குதற்கரிய வலியுடைய. தெய்வத்துக் கூட்டம் - கொற்றவையும் அவள் ஏவலருமாகிய கூட்டம். முன்னிய - தங்கிய. இழிதந்தாங்கு - விரைந்து இறங்கி வரு தலைப்போல; புனல்மலி பேரியாறு மலையினின்றும் விரைந்தோடி வந்தாற்போல இரவலரும் நின்னை நாடி வருவர் என்பதாம். வரை - அளவு; எல்லை. ஓவம் - ஓவியம். நகர்- அரண்மனை. பாவை - கொல்லிப் பாவைபோல விளங்கும் அழகிற் சிறந்த பணிமகளிர்.

புகன்ற - சொல்லிய. பொறி - பொறிந்த துகள்கள். சாந்தம் - சந்தனக் குழம்பு. கோதை - தலைமாலை. பூண் - பூண் பவை அணிகலன்கள். திருவில் - இந்திரவில். திருமணி- அழகிய நீலமணி புரையும் - ஒக்கும். கருவிய - தொகுதி கொண்ட. மழை - கார்மேகம். வரை - பக்கமலை. சேண்நாறு நல்லிசை- நெடுந்தொலைவுக்கும் பரவிய நல்ல புகழ்: அது கற்பின் செவ்வி- சேயிழை - செவ்வையான அணிகலன் உடையாள்: தேவியைக் குறித்தது; அன்மொழித் தொகை. கால் காற்று. புணரி - அலை. படப்பை - கடற்கரை நாட்டுப் பகுதி.

சோல் பாசறையிடத்துள்ளான். அவன் பிரிவுக்கு ஆற்றாளாகத் தேவி வருந்துகின்றாள். தன் குறையை மறைக்கப் பூசிப் புனைந்து கொள்ளுகின்றாள். எனினும் அவள் மார்புச் சாந்தம் காய்ந்து பொறிபடுகின்றது. அவள் கண்களின்றும் பெருகி வழிந்தோடும் நீர் மார்பிடை வீழ்ந்து, இரு நகில்களுக் இடையே பாய்ந்து ஓடுகின்றது. இதனை நயமாக, இந்திர