பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒன்பதாம் பத்து

311

சொற்பொருளும் விளக்கமும்: மீன் - விண்மீன். வயின்- இடம். வானம் - மழை. வாய்ப்ப - பெய்ய. அச்சற்று – அச்சமற்று. ஏமம் - பாதுகாப்பு. இருள் - துன்பம். தம்துணை - தமக்குரிய துணையாக அமைந்த: துணையென்றது அரசனுக்குரிய ஆட்சியுறுப்புக்களை. நிறைய - நிறைவாக. கற்று - கற்றறிந்து. சுழி - மிகுதி. உடற்றும் - போரிடும். கழிந்தோர் -வளமிகுந்த பகையரசர்; வினையாலணையும் பெயர். தூ - வலிமை. ஒளிறு - விளக்கம். வயம் - வலிமை. களிறு - போர்க்களிறு. கலம் - அணிகலன்கள். தொன்று மொழிதல் - பழமை பாராட்டல்; பழைய நட்புறவை மீண்டும் புதுப்பித்தல். பகல் - நடுநிலைமை. செம்மை - செவ்விய பண்புகள். விறல் - வெற்றி மேம்பாடு. நற்கு – நன்கு; வலித்தல் விகாரம். அறன் - அக்கடவுள்.

ஈரம் - அருள் நெஞ்சம். ’அளப்பு அருமை' என்றது அவனது திறத்தை. 'கொளக்குறைப்டாமை' என்றது அவனது செல்வத்தை. நாப்பண் - நடுவே. பூத்த - பொலிவு பெற்ற. சுற்றம் - அரசச்சுற்றமும்; உறவினருமாம். உருகெழு மரபு: அச்சந்தருதலையுடைய முறைமை. அயிரை - அயிரை மலைக்கண்ணுள்ள கொற்றவை. இகுப்ப - பெருமை குன்ற. உடலுநர் - பகைத்துப் போரிட்டோர். மிடல் - வலிமை. அருப்பம் - அரணிடம். பெரும்பெயர் - பெருமை கொண்ட பொருள்கள். பலர் கை இரீஇய - இரவலர் பலருக்கும் கொடுத்துதவிய. கொற்றத்திரு - வெற்றிச் செல்வம். உரவோர் - வலிமையாளர். உம்பல் - வழித்தோன்றல். புழுக்கு - வேகவைத்துப் புழுக்கிய உணவு; இவை பயறுவகைகளாற் செய்யப் பெறுபவை. மட்டம் - கள். புகா - உணவு. எழாஅ - புறமிட்டார்பாற் படைகொண்டு எழாத. மாந்தை - மாந்தைப் பட்டினம். வேளை - வேளைச்செடி. விரவுதல்- கலத்தல். கட்டூர் - பாசறை. வயவர்- வீரர்.

உரவு - வலிமை. தாங்குதல் - தடுத்தல். தானை - படை. சாபம் - வில். ஞாண் - நாண். வார்ந்து - வகுத்து; நீண்டும் ஆம். ஏந்து குவவு - உயர்ந்து திரண்ட. பாண்டில் -வட்டச் சேணம். மொய்ம்பு - தோள். பூத்தன்ன – விளங்கினாற்போல. கவரி - கவரிமயிர்த் தலையாட்டம். மேல்கொண்டு- மேலேறிக் கொண்டு. காழ் - காம்பு. எஃகம் - வேல். விழுமம் - துன்பம். புகலும் - விரும்பும். ஆண்மை - மறமாண்பு. காஞ்சி -நிலையாமை. சான்ற - நிறைந்த. வயவர் - மறவர். களத்திற்குச் செல்வார் மீண்டு வருவாரென்பது நிலையற்றது ஆதலின்