பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

312

பதிற்றுப்பத்து தெளிவுரை

மறவரைக் 'காஞ்சி சான்ற வயவர்' என்றனர்; பிறரினும் நிலையாமையை நன்கு அறிந்தவர் அவரே யாகலின்.

‘தண்ணுமை, தெண்கிணை' என்பன பறைவகைகள். மழை செத்து- மேகத்து இடிமுழக்காகக் கருதி. மயங்கி - கலந்து. பழனம் - மருதநிலத்துச் சோலை. கறங்கல் - ஒலித்தல். கூழ் - செல்வம். ஏறு - ஆனேறு. படப்பை - பக்கம். நன்னாடு - சோழ வளநாடு. வளம் - அழகு; செய்வினைத் தொழில்வளமையும் ஆம். தேறிய - தெளிந்த. ஒண்டொடி- ஒளிவளை யணிந்தவள்; அன்மொழித்தொகை.

'நாள் திங்களாகவும், திங்கள் யாண்டாகவும், யாண்டு ஊழியாகவும், ஊழி வெள்ளமாகவும் நின் வாணாள் பெருகிப் பல்க, நீயும் நெடிது வாழ்வாயாக' என்பதாம். இறை - தலைமை. கிழவோய் - உரியவனே!