பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/318

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

314

பதிற்றுப்பத்து தெளிவுரை

நெடுமதில் நிரைஞாயிற்
கடிமிளைக் குண்டு கிடங்கின்

மீப்புடை யாரரண் காப்புடைத் தேயம்
நெஞ்சுபுகல் அழிந்து நிலைதளர்பு ஓரீஇ
ஒல்லா மன்னர் நடுங்க
நல்ல மன்ற இவண் வீங்கிய செலவே.

3. வந்தனென் பெரும கண்டனென் செலற்கே
களிறு கலிமான் தேரொடு சுரந்து
நன்கலன் ஈயும் நகைசால் இருக்கை
மாரி என்னாய் பனியென மடியாய்
பகைவெம் மையின் அசையா வூக்கலை

வேறுபுலத் திறுத்த விறல்வெந் தானையொடு
மாறா மைந்தர் மாறுநிலை தேய
மைந்துமலி ஊக்கத்த கந்துகால் கீழ்ந்து
கடாஅ யானை முழங்கும்
இடாஅ ஏணிநின் பாசறை யானே!

4. பேணுதகு சிறப்பிற் பெண்ணியல் பாயினும்
என்னொடு புரையுநள் அல்லள்
தன்னொடு புரையுநர்த் தானறி குநளே!


இவை புறத்திரட்டிலும், தொல்காப்பிய உரைகட்கிடையிலும் காணப்பெற்றவை.

இவ்வாறு காணப்படும் செய்யுள்கள் இந்நூல் முழுமையும் ஒரு காலத்தே கிடைத்தது என்பதற்குச் சான்று பகர்கின்றன.