பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடிய சான்றோர்

323

பாடிய சான்ருேர் 323 8. கபிலர்

சங்க நூற்களுள் காணப்படும் புலமைச் செறிவும், ஒழுக்க மேம்பாடும், அருளின் செவ்வியும், நட்பின் சால்பும், செம்மை யின் சிறப்பும் அமைந்து விளங்கிய சான்ருேர்களிற் குறிப் பிடத்தக்க சில்ருட் கபிலர் பெருமானும் ஒருவர் ஆவார். இந்நூலிலுள்ள ஏழாம்புத்து இவர் செல்வக்க்டுங்கோ வாழி யாதனைப் பாடியது ஆகும். இவர் செய்யுட்கள், வரலாறு ரண்டும் தனித்து ஆராயவேண்டிய சிறப்பும் விரிவும் காண்டவாகும். அந்தப் பெரும் பணியை மேற்கொண்டு இவர் வரலாற்றை நயமும் செறியும் உடையதாகக் செய்து அளித்துள்ளனர், பெரும்புலவரான் நாவலர் ந. மு. வேங்கட் சாமி நாட்டார் அவர்கள். அதன்கண் கபிலர் வரலாறு பற்றிய எல்லாச் செய்திகளையும் இனிதே கற்று இன்புறலாம்.

இவர் குறிஞ்சித்திணைச் செய்யுட்களைச் செய்வதில் வல்ல வர் ஐங்குறு நூற்றிற் குறிஞ்சிபுற்றிய நூறு செய்யுட்களும், குறிஞ்சி கலியும், குறிஞ்சி பாட்டும் அகநானூறு நற்றிணை குறுந்தொகை ஆகியவற்றுள் குறிஞ்சிபற்றிய பல செய்யுட் களும் இவர் செய்தவை. புறநானூற்றுள்ளும் 28 செய்யுட் களே இவர் செய்துள்ளனர்.

ஆழ்ந்த தமிழ்ச் செறிவும், அமைந்த பண்பு நலமும், அழகிய காட்சி யோவியங்களும், வளமையான வரலாற்றுச் ச்ெய்திகளுமாகத் தமிழ்வரலாற்றுக் கருவூலப் பெட்டகம் போலத் திகழ்வன இவரது செய்யுட்கள்.

பாரியின்பால் கெழுதகை நட்பினராகத் திகழ்ந்து, அவன் மறைவுக்குப் பின்னரும், அவன் பெண்களை மணஞ் செய்வித்து வாழ்வளித்தபின், வடக்கிருந்து உயிர் நீத்த ஒப்பற்ற நட்பின் சர்ல்பும் உடையவர் இவர்.

"இரக்கு வாரேன்; எஞ்சிக் கூறேன்' என்று, இவர் தமது நிலையை உரைப்பது பொருத்தமாகவே விளங்குகின்றது. 'பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியலையே! நட்டோர்க் கல்லது கண்ணஞ்சலையே! மகளிர்க்கல்லது மணங்கமழ் அகலம் மலர்ப்பு அறிய்லையே! நிலந்திறம் பெயரும் காலை யாயினும், கிளந்தசொல் நீ பொய்ப்பு அறியலேயே!" என்று வாழியாதனின் குணநலன்களைக் கூறி, நனந்தல உலகம் செய்த நன்று உண்டு எனின், அடையடுப்பு அறியா அருவி யாம்பல் ஆயிர வெள்ள ஆழி, வாழியாத, வாழிய பலவே என்று வாழ்த்துகின்ற நயம் பெரிதும் இன்புறற் பாலதாகும்.