பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

பதிற்றுப்பத்து தெளிவுரை

களிலே எல்லாம் தவறாமற் பெய்து நின் நாட்டைஎப்போதும் வளப்படுத்தி வருகின்றது.

இவ்வாறாக, நின்னாற் காக்கப் பெறுகின்ற நாடுதான், நோயோடு பசியும் நீங்கியதாக, வளர்த்தால் பொலிவுபெற்றதாக விளங்குகின்றதே!

(பகை நாட்டின் அழிவையும், சேரலாதன் நாட்டின் சிறப்பையும் கூறி, அவனது மறமாண்பையும் நாடுகாவல் சிறப்பையும் வியந்து போற்றுகின்றனர்.)

சொற்பொருள் : தொறுத்த ஆடுகளைக் கிடைகட்டிய ஆரல் - ஆரல் மீன்; கார்த்திகை நட்சத்திரம். நெய்தல் - நெய்தற்பூக்கள்; ஒருவகை நீர்ப்பூக்கள். இருங்கண் - கருமையான கண்; பெரிய கண்ணுமாம். கலி - ஆரவாரம். ஆம்பல் - ஆம்பற் பூக்கள்; இவை துணங்கை மகளிரது தழையுடைகளில் இட்டுக் கட்டியிருப்பன; அவர் ஆடியபோது உதிர்ந்தன. ஒலித்தல் - தழைத்தல். இமிழ் மருது - பறவையினத்து ஆரவாரத்தோடே விளங்கும் மருது.

வைப்பு - ஊர்கள். புனல் வாயில் - வயிலிடை விளங்கும் பாய்சால்களின் தலைப்பகுதி; வாய்த்தலை எனவும் கூறப்பெறும். மூதா - முதிய பசு; முதுமையால் தொலைதூரஞ் சென்று மேய்தற்கு இயலாத கிழட்டுப்பசு. துணங்கை - மகளிரது கூத்துவகையுள் ஒன்று; இரு கைகளையும் மடக்கியவாறு விரல்களாலே அடித்தடித்துக் குதித்தாடும் ஒருவகை மகிழ்ச்சிக் கூத்து.

கவின் - அழகு. நீரழி பாக்கம் - நீர்வளத்து மிகுதியாலே அழிவெய்தக்கூடிய பாக்கம்; பகைவரால் எளிதாக அழித்தற்கு முடியாதது என்பதாம். ‘பாக்கம்’ என்பது நெய்தல் நிலத்து ஊர்ப் பெயர்; அது மருதநிலத்து ஊருக்கு மருவி வந்தது . நெய்தலடுத்த மருதமும் ஆம். கூற்றம் - கூறுபடுத்துவது. திரிகாய் - முறுக்கிய காய். விடத்தேர் - விடத்தேரை என்பதொரு முள்மரம். கார் உடை - கரிய உடைமரம்; முள் மரத்துள் ஒருவகை. சுவை - பிளவுபட்ட. ஊரிய- பரந்த. நெருஞ்சி - நெருஞ்சி முள்ளின் செடி. பறந்தலை . பாழிடம். மறுத்த-விலக்கிய. உள்ளம் - ஊக்கம். பனிக்கும் - நடுக்குறச் செய்யும்.

மேன - மேயின; விரும்புதற்கேற்ற தன்மை பெற்றன. புறவு - சிறுகாடு, ‘மகளிரொடு மள்ளர் மேன’ என்றது அவர் தாம் போரொழிந்தாராய் இன்பக் களியாட்டுக்களில் திளைத்படியே இருந்தனர் என்றதாம். ஆறு - வழி. பகர்நர் - விலை