பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/63

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

இரண்டாம் பத்து

59

 கொண்டு செல்லும் தூம்புடைய தோற்கருவி. தொன்றோர் காலை தொன்றுதொட்டே. நல்ல - நல்வளம் உடையவா யிருந்தன. 'கைபுடைத்து இரங்கலாவது' அழிபாட்டின் கொடுமையைக்கண்டு மனம்தாளாமல் கையால் மார்பில் அடித்தவாறு வருந்துதல். 'மாண்டன பல' முன்பு: ஆயின் இனி, அவையெல்லாம் 'மாணா மாட்சிய' ஆயின வென்று முடிக்க.

நின்னைப் பகைத்தோர் அரசர்; எனினும், நீதான் அவர் நாட்டையே முற்றவும் அழித்து, மக்களை அலைக்கழியவிடுதல் பொருந்துமோ என்பார்போலச் சேரலாதனைப் பகைத்தவர் நாட்டின் பேரழிவைக் கூறுவதன் மூலம், அவன் போர் மறத்தை உணர்த்துகின்றார். 'இதனைச் செய்யும் நீதான் நின் தேவியின் அழிவை நினைப்பாயோ?' என்று வருந்தி உரைப்பதுமாகலாம்.

'மாணா மாட்சியாகிய' என்றது, மேலும் அவர்தாம் தம் நாட்டை வளப்படுத்தும் வன்மையைப் பெறாதவாறு, நீதான் வலியவரான ஆடவரை முற்றவும் அழித்ததனாலும், எவரையும் சென்று தொழில் செய்வதற்கு இசைவளிக்காத தனாலும், அவை வளனறு பைதிரமாகவே இனி என்றும் விளங்கும் போலும் என்பதாம். - .مر

இதனுற் சேரலாதனின் பாசறை இருக்கையும், பகை யொழிக்கும் மறமாண்பும் உரைத்து, தேவியின் நலிவையும் சொல்லி, இப் போர்மறச்செயலை நிறுத்திவிட்டுத் தேவியைக் காத்தருளச் செல்லுமாறும் குறிப்பாக உரைக்கின்றனர்.

20. அட்டுமலர் மார்பன் !

துறை : இயன்மொழி வாழ்த்து. வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர்வண்ணமும். தூக்கு : செந்தூக்கும் வஞ்சித் தூக்கும். பெயர் : அட்டுமலர் மார்பன். இதனாற் சொல்லியது : சேரலாதனின் போர் மறமும் கொடை மறமும்.

[சேரலாதனின் இயல்புகளைக் கூறி வாழ்த்தியமையால் இது 'இயன்மொழி வாழ்த்து' ஆயிற்று. "இரு முந்நீர்", 'முரணியோர்', 'கடிமிளை', 'நெடுமதில்' எனவெழுந்த வஞ்சி யடிகளான் வஞ்சித் தூக்கும் ஆயிற்று. செருக்கினாற் கொண்ட மகிழ்வினை, 'அடாஅ அடுபுகை அட்டுமலர்