பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/74

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

70

பதிற்றுப்பத்து தெளிவுரை

 தம்மைவிட்டு அகன்று வேற்றிடம் போகாதாராயிருந்து உண்ணலின் பொருட்டாகவும், ஆட்டு வாணிகர் ஊனைக் கொந்தும் கட்டை மேலாக வைத்துக் கொந்திய, நல்ல நிணம் பொருந்திய கொழுமையான இறைச்சித் துண்டுகளை வேகவைத்துத் தாளிக்குந்தோறும், மிகுதியாக எழுகின்ற ஆர்ப் பொலியானது கடலொலிபோல ஒலிக்க, செழுமையுடைய மாளிகையின் நடுவிடத்தே வைத்து உணவினைச் சமைக்கும் போது, புகையெழுந்த அடிசிலினிடத்துப் பெய்த நெய்யினின்று எழும் ஆவுதிப் புகையும்,

இரண்டும் ஒன்றுகலந்து கமழுகின்ற நாற்றத்தோடு, வானத்தே நிலைபெற்றுள்ள கடவுளும் விருப்பங்கொள்ளத் தகுந்தபடி பேணி, கொடுக்கக் குறைபடாத நிறைந்த செல்வத்திலே நின்று முதிர்ந்த குற்றமற்ற சிறப்பினையும், மழை போலச் சொரியும் அழகிய மதநீரைக் கொண்ட போர்த் தொழில் வல்ல யானையின் மேலாக இருக்கும் ஏற்றுரி போர்த்த போர்முரசம் ஒலிமுழங்க, ஆரவாரம் மிக்குச்சென்று பகைவர்நாட்டு நன்கலங்களை யெல்லாம் கவர்ந்துகொணரும் அவர் நாட்டு மண்படிந்த மார்பினைக் கொண்டவனே!

முல்லைப்பூக் கண்ணியை அணிந்தவரான பலவாகிய ஆனிரைகளை உடையவரான கோவலர்கள், புல் மிகுதியாக வுடைய பரந்த புலத்திலே தம் பலவான பசுக்களையும் பரவலாக மேயவிட்டுக், கற்கள் உயர்ந்த காட்டிடத்தே ஒளி திகழும் மணிகளைப் பொறுக்கிப் பெறுகின்ற தன்மையுடைய மிதியாகிய செருப்பில்லாதே, செருப்பென்னும் மலையினை யுடைய பூழிநாட்டினர்க்கும் வேந்தனாகத் திகழ்பவனே! பல வெற்றி மலர்க்கண்ணிகளையெல்லாம் குவியச் சூடியவரான மழவர்க்குக் கவசத்தைப் போன்று விளங்குபவனே!

பலவான பழங்களைக் கொண்டுள்ள, நல்ல பயன் கெழுமிய நெடிய உச்சியையுடைய, நீர் போதரும் பக்கத்தே மேலேறிச் செல்லுதற்கியலாத, சேய்மையிலிருந்தே நுனித்துப் பார்க்கும் பார்வையையுடைய கொக்கின் பரிவேட்டத்திற்கு அஞ்சாத, சிறப்புடைய நாட்டிடையே, பகைவர் போரியற்றா வாறு குறுக்கிட்டுக் கிடக்கும், அயிரை யென்னும் நேரிதாக உயர்ந்த நெடிய மலைக்கு உரியோனகிய தலைவனே!

ஓர் யாண்டேனும் பொய்த்தலை அறியாது மழைபெய்து பயன் விளைத்தலாலே, மாந்தர்க்கு யாண்டுகள் நோயற்ற

s