பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/77

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மூன்றாம் பத்து

73

 சாதது அயிரை மலை நீர் போதரும் பக்கத்தே மேலேறிச் செல்வது அயிரை மீன்; செல்லாதது அயிரை மலை. அயிரை மலை கடந்து போதற்கு அரிதாதலின் பகைவர் முனைகெடக் குறுக்கே கிடப்பது என்றனர்.

பயம் - நன்மை. 'ஊழி, மாந்தர்க்கு நோயில் ஊழியாக' என்று கூட்டிப் பொருளுரைக்க. மண்ணாவாயின் மணம் கமழ்தல் கூந்தலின் இயற்கையான நறுமணத்தால்; உயர் சாதிப் பெண்ணின் கூந்தல் நறுமணம் கமழும் என்பர். 'அரிவை கூந்தலின் நறியவும் உளவோ' (குறு 2) என்பதும் காண்க. 'மண்ணாவாயின' தன்மை, தன் தலைவன் போர்வினை மேற்கொண்டானாகத் தன்னைப் பிரிந்து உறைதலால். மண்ணியபோது கார்மலராகிய முல்லை பெய்யப் பெறுதலின் முல்லைமணம் கமழும் கூந்தல் என்றனர். 'இரவு கூம்பாது நிலைத்திருக்கும் தாமரை மலருண்டெனின், அது அவள் திருமுகத் தலமரும் பெருமழைக்கண்' என்க. இது கண் உறக்கம் பெறாதநிலையாற் சிவப்புற்ற தன்மையைக் குறித்துக் கூறியதாம். ஒரீஇயினபோல - குளத்தினின்றும் நீங்கிப் போயினபோல. 'இவளோடு' என்றது, குட்டுவன் தேவியோடு இருந்த சமயமாதலால், அவளைச் சுட்டிக் கூறிய தாகும். வெள்ளம் - பேரெண்.

22. கயிறுகுறு முகவை !

துறை: வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும், தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும். பெயர் : கயிறுகுறு முகவை. இதனாற் சொல்லியது : சேரனின் வெற்றி மேம்பாடு.

[துறை விளக்கம் முதலியன : 'சீறினை' ஆதலின் நாடு கெழு தண்பணை பாழாகும் எனப் போர்புரிதற்குச் செல்லும் செலவின் விளைவை மேலிட்டுக் கூறியமையால், வஞ்சித் துறைப் பாடாண் பாட்டுஆயிற்று. 'உழைப் பொலிந்த மா' என்பது முதலாகிய நாலடியும், "கடிமிளை" என்பது முதலாகிய இரண்டடியும் வஞ்சியடியாய் வந்தமையான் வஞ்சித் தூக்கும் கூறினர். சில ஊறிய நீர்வாய்ப் பத்தற் கயிறு குறுமுகவை' எனத் தன்னால் நீர் வாங்குவது பெரிதன்றித், தன் கயிற்றையே நின்று வாங்கப்படும் முகவை எனக் கோடை வெம்மையின் நீரற்ற தன்மையைக் கூறிய சிறப்பால் இப் பாட்டுக்கு இப் பெயரைத் தந்தனர்.]