பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/99

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மூன்றாம் பத்து

95

 நிறைந்திருந்தன என்க. செறுவிடை வண்டி செல்வது கூறியது, அறுவடைக்குப் பின்னர் என்க. அறுவடைக்குப் பின்னர் காய்ந்து கிடக்கவேண்டிய வயற்புறமும் நீர்வள மிகுதியால் சேறுபட்டுக் கிடந்தது என்கின்றனர். வண்டிச் சக்கரம் சேற்றிற் சிக்க, அதனைச் செலுத்துவார் எருதுகளைச் செலுத்தச் செய்த ஆரவாரம் என்றது, இந் நாளினும் கிராமங்களிற் கேட்கக் கூடியதாகும். 'உருளி அல்லற்பட்டுக் கதுமென மண்டியது' வண்டியில் நெற்பாரம் மிகுதியா யிருந்ததனால் என்க. கள் - வண்டு. உருளி - சக்கரம். புதவு - கதவு. நிறை - வரிசை. மண்ட - அழுந்த அள்ளல் - சேறு. முயலும் - முயலுதற்குக் காரணமான. நெய்தல் - நீர்ப்பூ வகையுள் ஒன்று; வைகறையில் மலர்வது. 'நல்எருது' என்றது, அல்லற்பட்ட வல்வாய் உருளையையும் இழுத்துச் செல்லும் வலிமையுடைய எருது என்றதாம். 'அள்ளல் தங்கிய பகடுறு விழுமம், கள்ளார் களமர் பெயர்க்கும் ஆர்ப்பே' என, மதுரைக்காஞ்சி யாசிரியரும் இதனை உரைப்பர் (259 - 60). இவ் வாரவாரமன்றி வேறு பூசலால் உண்டாகும் ஆரவாரமில்லாத வளநாடு என்க. சிவத்தல் - வெகுளல்; கோபித்தல். 'நோக்கலின்' என்றது. அவன் நோக்கவும், அவன் படைமறவர் சென்று வினைமுடித்தனர் என்றற்காம்; அவன் நேரிற் சென்றானல்லன் என்றதுமாம்.

28. உருத்துவரு மலிர்நிறை !

துறை : நாடு வாழ்த்து. வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு : செந்தூக்கு. பெயர் : உருத்துவரு மலிர்நிறை. இதனாற் சொல்லியது : குட்டுவனின் நாடுகாவற் சிறப்பு.

பெயர் விளக்கம் : நாடு காத்தலின் சிறப்பினை வியந்து குட்டுவனைப் பாராட்டிப் பாடுதலால் நாடு வாழ்த்து என்றனர். தழைகளைச் சூடியபடியே சினந்து வருகின்ற பெரு வெள்ளமானது, தன்னை வயல் பொறுக்குமாறு காணவென்று போர்வேட்டு வருவோரைப்போல் வந்தது என்று கூறிய சிறப்பால்,இப்பாட்டு, 'உருத்துவரு மலிர்நிறை' எனப் பெயர் பெற்றது.]

திருவுடைத் தம்ம பெருவிறற் பகைவர் பைங்கண் யானைப் புணர்நிரை துமிய உரந்துரங் தெறிந்த கறையடிக் கழற்கால்