பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

8 00 நூலாசிரியர்கள் வரலாறு. 66 35 யும் அவன்மகன் குட்டுவன்சேரலென்பவனையும் பரிசிலாகப்பெற்ற வர்.(உம்பற்காடென்பது மலைநாட்டைச்சார்ந்ததொருநாடு) திருவள் ளுவமாலையிலுள்ள, மாலுங்குறளாய் என்னும்வெண்பா இவர் செய்ததாகத் தெரிதலின், அம்மாலையை இயற்றிய உக்கிரப்பெருவழு தியாரும் மற்றப்புலவர்களும் இருந்தகாலத்தவரென்று இவர் எண் ணப்படுகிறார்; கபிலருடைய அருமைத்துணைவர் ; இது பழைய இலக்கண நூல்களினுரைகளில், 'கபிலபரணர்' என்று வழங்கும் தொகைநிலைத்தொடரால் விளங்குகின்றது. அதிகமானெடுமானஞ்சி கோவலூர்த்தலைவனைவென்று அவ்வூரைக் கைக்கொண்டமை இவ ராற்புனைந்துகூறப்பெற்றுள்ளது. இது புறநானூற்றில், 'அமரர்ப் பேணியும்" என்னும்பாட்டில், "பரணன்பாடினன் மற்கொன்மற்று நீ, முரண்மிகு கோவலூர் நூறிநி, னரண்டு திகிரி யேந்திய தோளே" எனஒளவையார் பாராட்டியிருத்தலால் நன்குபுலப்படுகின்றது. இர ண்டு திருவிளையாடற்புராணங்களிலும் இவர் புகழப்பட்டிருக்கிறார். எட்டுத்தொகையில் இவர்செய்தனவாக அஉ - செய்யுட்கள் இப்பொ ழுது தெரிகின்றன : (இந்நூல் க0; நற்றிணை -க உ; குறுந் தொகை - கரு; அகநானூறு ஙஉ; புறநானூறு - க௩.) அச்செய்யுட் களில்வந்துள்ள தெய்வங்களின் பெயர்களும் பிறபெயர்களும் வருமாறு:- தெய்வங்கள்:- சிவபெருமான்,முருகக்கடவுள். பாவை:- கொல்லிப்பாவை. ஸ்தலங்கள் :- அலைவாய் = திருச்செந்தூர், ஆலமுற்றம், கூடல். தேயத்தார்: -ஆரியர், கொங்கர், பூழியர். வேளிர்கள்:- பதினான்குவேளிர், பதினொரு வேளிர் த உ தலைவர்:- அகுதை, அஞ்சி, அதகன், அதிகன், அழிசி,அன்னி, ஆட்டனத்தி, ஆய், உதியன், உருவப்பஃறேரிளஞ் சேட்சென்னி முதலிய அறுவர், எவ்வி, ஓரி=வல்விலோரி, கட்டி, கரிகால்வளவன், கழுவுள், குட்டுவன், குறும்பியன், சேந்தன், தழும்பன், தித்தன், திதியன், நள்ளி, நன்னன், நீடூர்கிழவன், பசும்பூட் பாண்டியன் பழையன், பாணன், பேகன், பொறையன், மத்தி, மிஞிலி = DIலி விச்சியர்பெருமகன். தலைவியர்:- ஆதிமந்தி, ஐயை, மருதி. நாடுகள்:- ஆரியநாடு, கொங்குநாடு, புகார்நாடு,பூழிநாடு,