பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறாம் பத்து. கூக (ங) பௌவத்து (ச) நன்கலவெறுக்கையென்றது பௌவத்திலே வந்த நன்கலமாகிய செல்வமென்றவாறு. பந்தர் - பண்டசாலைகள். நன்கலவெறுக்கை துஞ்சுமென்றசிறப்பானே, இதற்கு, 'துஞ்சும் பந்தர்' என்று பெயராயிற்று. எ செவ்வூன்றோன்றா வெண்டுவையென்றது அரைத்துக்கரைத்த மையால் தன்னிற்புக்க செவ்வூன் தோன்றாத வெள்ளிய துவையென்றவாறு. முதிரையென்றது அவரை துவரை முதலாயின வற்றை அ. வாலூனென்றது வெண்ணிண ஊனென் றவாறு. வல்சிமழவ்ரென்றது தம் செல்வச்செருக்கானே சோறுண்பது பெரி தன்றி முன்பு எண்ணப்பட்டவற்றையே உணவாகவுடைய வீரரென்றவாறு. க. இரவலரையென்னும் இரண்டாவது விகாரத்தால் தொக்கது; ரவலரைவேண்டியென்றது தன்னாட்டு இரவலரின்மையின், அவரைப் பெறவிரும்பியென்றவாறு. கக. தேரிற்றந்தென்றது அவ்விரவலருக்கு அவருள்வழித் தேரைப் போகவிட்டு அதிலே அவர்களை வரப்பண்ணியென்றவாறு. தேரானென உருபுவிரிக்க ; தேரெனத் தேர்ச்சியாக்கி, அவ்விர வலரை அவருள்ள விடத்தில் தேடி அழைத்தென்றுமாம். கச. பொங்கலாடியென்றது எஃகின பஞ்சுபோல வெளுத்துப் பொங்கியெழுதலைச் செய்தென்றவாறு. (கரு) வெண்மழைபோலாச் (கசு) சென்றாலியரென்றது அம்மழை பெய்து புறந்தருங் கூற்றையொத்து அது பெய்துவெண்மழையாகக் கழியுங் கூற்றை ஒவ்வாது ஒழிகவென் றவாறு. கஅ. நீடுவரையடுக்கழென விரிக்க; அடுக்கம் ஈண்டு அடுக்குதல். (கசு) அல்கலும் (கஅ)நாடுகைக்கொண்டு (கஎ) வேந்தர்தாரழிந்து அல றப் (ககூ) பொருது சினந்தணிந்த செருப்புகலாண்மையென மாறிக்கூட்டுக. (கக) ஆண்மையினையும் (உ0) வாளினையும் (உக) உள்ளத்தினையு முடைய குருசிலென்க, (கரு) மழையை அவன்றன்னோடு உவமியாது அவன் (உக)நாளோடு உவமித்தது, அவனோடு அவன் நாளுக்குள்ள ஒற்றுமைபற்றியென்க. (க) ஆன்றோள் கணவ, சான்றோர் புரவல், (உ) நின்னயந்து வந்த னென்; கொற்றவ, (சு) பொரும், (அ) மழவர்மேய்ம்மறை, (க) கோவே, அண்ணல், (கஉ) தோன்றல், (க) பெரும, (உக) குருசில், நீன்னாள் (கரு) வெண் மழைபோலாச் (கசு) சென்றாலியரோவென மாறிக்கூட்டி வினை முடிவுசெய்க.