பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

2. வெண்டோடு அசைத்தல் - தங்குவித்தல். (எ).க ஆறாம் பத்து கூரு பனந்தோடு; தோட்டின் கண்ணெனவிரிக்க. வாண்முகம் - வாள்வாய். (உ) குவளையரென்றது வினையெச்சவினைக்குறிப்புமுற்று; அதனைக் கூறியென்பதெனொடு முடிக்க. (ங) யாக்கையராகிய (ச) மறவரென இருபெயரொட்டு. அ. கண்ணிகண்ணுதல் - தாங்கள்சூடிய போர்க்கண்ணிக்கு ஏற்ப வினைசெயக்கருதுதல். க0. எயிலெறிவல்விலென்றது விற்படையினை. ஏவிளங்கு தடக்கை ன்றது ஏத்தொழிலுக்குள்ள கூறுபாடெல்லாம்விளங்கிய தடக்கையென் றவாறு. இச்சிறப்பானே, இதற்கு ஏவிளங்குதடக்கை' என்று பெயராயிற்று. க௪. பெரியதோன்றுமென்றது பெருகத்தோன்றுமென்றவாறு. பல்பகட்டையென விரித்துப் பகட்டை அவை ஒலிப்பப்பூட்டி யெனக்கொள்க.. (கசு) பூட்டித் (கஅ) திருமணிபெறூஉமென முடிக்க. (அ) வயவர்பெருமகன், (கக) சான்றோர்மெய்ம்மறையாகிய (க) வானவரம்பனைப் (கரு) புன்புலம்வித்தும் வன்கைவினைஞர் தம் (கஎ) கொழுவழி மருங்கில் (கஅ) திருமணிபெறும் (ககூ) நாடுகிழவோன் (கஉ) என்றுசொல் லுவார்கள் ; அவன் அவ்வாறு செல்வக்கு றயிலனாதலான், அத்தரத்திற்கே ற்ப நமக்கு வேண்டுவன தருதலிற் குறையுடையனல்லன்; வந்தமைக்கேற்ப (க) விறலியராயுள்ளீர், ஆடலைக் குறையறச் செலுத்துமின்; பரிசிலராயுள் ளீர், நீயிரும் நும்கவிகளைப்பாடிக் கைவாப்பண்ணுமினென்று மாறிக்கூட்டி வினை முடிவு செய்த (கஉ) வானவரம்பன் (க்கூ) நாடுகிழவோனெனக் கூட்டவேண்டு தலின், மாறாயிற்று. இதனாற்சொல்லியது. அவனாட்டுச்செல்வமும் அதற்கேற்ற அவன் கொடையும் கூறியவாறாயிற்று. ஆடுக பாடுகவென்றதற்கு அவன்பாற்சென்று ஆடுக பாடுகவெனக் கூறாது இவ்வாறுகூறியதன் கருத்து, ஆற்றுப்படையென்னாது செந்துறைப் பாடர்ணென்று கிடந்தமையானெனக்கொள்க. (பி-ம்.) எ. புகவென. கக. மேலறை. கூ. படுவறியர். கஎ. மருங்கின். (ருகூ ) பகனீ டாக திரவுப்பொழுது பெருகி மாசி நின்ற மாகூர் திங்கட் (அ)