________________
ஆறாம் பத்து., கூகூ . வான வரம்பனெனப் பேரினிது விளக்கி யேனை மழவரைச் செருவிற் சுருக்கி மன்னரை யோட்டிக் குழவிகொள் வாரிற் குடிபுறந் தந்து நாடல் சான்ற நயனுடை நெஞ்சி னாடுகோட் பாட்டுச் சேரலாதனை யரீத்த செய்யு ளடங்கிய கொள்கைக் காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடினார் பத்துப்பாட்டு (பி - ம்:) கோட்பட்டவாடையை, நச்சனையார். அவைதாம்: வடுவெடு நுண்ணயிர், சிறுசெங்குவளை, குண்டு கண்ணகழி, நில்லாத்தானை, துஞ்சும்பந்தர், வேந்துமெய்ம்மறந்த வாழ்ச்சி, சில்வளை விறலி, ஏவிளங்குதடக்கை, மாகூர்திங்கள், மரம் படுதீங்கனி. இவைபாட்டின்பதிகம். பாடிப்பெற்றபரிசில் : கலனணிகவென்று அவர்க்கு ஒன்பதுகாப் பொன்னும் நூறாயிரங் காணமுங்கொடுத்துத் தன்பக்கத்துக் கொண்டான் அக்கோ. தான். ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் முப்பத்தெட்டியாண்டு வீற்றிருந் (பி - ம்.) ஆடுகோட்பாடுசேரலாதன். ஆறாம்பத்து முற்றிற்று.