பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

க0உ விரிக்க. விக்க. பதிற்றுப் பத்து. புல்லுடை வியன்புலம் பல்லா பரப்பி வளனுடைச் செறுவின் விளைந்தவை யுதிர்ந்த களனறு குப்பை காஞ்சிச் சேர்த்தி யரிய லார்கை வன்கை வினைந ரருவி யாம்பன் மலைந்த சென்னிய ராடுசிறை வரிவண் டோப்பும் பாடல் சான்றவவ ரகன்றலை நாடே. 2. துறை - செந்துறைப்பாடாண்பாட்டு. வண்ணமும் தூக்கும் அது. பெயர் - (க) வரைபோலிஞ்சி பஃறோலொடுவென்னும் ஒடு, விகாரத்தால் தொக்கதாக்கி ரு. புறத்திறுக்குமென்றதற்கு நின் தானை புறத்திருக்குமென வரு (கூ) ஞாயிறுபல்கிய மாயமொடு (எ) உழிதரு (அ) மடங்கலெனக் கூட்டி, உலகம் கடல்கொண்டுகிடந்தகாலத்து அக்கடல்நீரெல்லாம்வற்ற எறித்தற்குத் தோன்றும் ஆதித்தர் பலவான மாயத்தோடேகூடி அந்நீர் வற் றும்படி திரிதரு வடவைத்தீயென்றுரைக்க. மாயம்போ றலான் மாயமெனப்பட்டது. (சூ) சுடர்திகழ்பு (எ) ஒல்லா மயலொடு பாடிமிழ்பு உழிதரு (அ) மடங்கலென்றது சுடர்திகழ்ந்து உயிர்கட்குப் பொறுக்கமுடியாத மயக்கத் தைச் செய்தலோடே ஒலித்துத் திரிதரும் மடங்கலென்றவாறு. (ரு) ஒள்ளழல் (அ) மடங்கல்வண்ணம் கொண்டவெனக்கூட்டி, ஒள் ளழலானது மடங்கலாகிய அழலின்வண்ணத்தைக்கொள்கைக்குக் காரண மாய்நின்றவெனவுரைக்க. இனி (சு) ஞாயிறுபலவாதலை அவன்பகைவர்நாட்டில் உற்பாதமாகத் தோன்றும் ஆதித்தர்பலராக்கி, (அ) மடங்கலென்றதனைக் கூற்றமாக்கி, சுடர்திகழ்பு என்றதனைத் திகழவெனத்திரித்து, ஒள்ளழலானது ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர்திகழ மடங்கல்வண்ணங்கொண்டவேந்தேயென உரைப்பாருமுளர். (கஉ) (கக) தடக்கையராகிய (கஉ) நின் பகைவரென மாறிக்கூட்டுக. (க0) வரைபோல் இஞ்சியை அரணாகவடையராயிருந்தே . சிறப்பானே, இதற்கு 'வரைபோலிஞ்சி' திறைதருபவெனச்சொன்ன என்று பெயராயிற்று.