பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நூலாசிரியர்கள் வரலாறு. 11 வேள்பாரியினுடைய உயிர்நண்பரும் அவனுடைய அவைக்க ளத்துப்புலவருமாக இவர் விளங்கினார் ; தாம் விரும்பியவண்ணம் அவன்தன் மகளிரைக் கொடாதது பற்றித் தமிழ்நாட்டு மூவேந்த ரும் அழுக்காறுற்று அவனைக் கொல்லநினைந்து நால்வகைச்சேனைக ளோடும் அவன் மலையைச்சூழ்ந்தகாலையில் அவர்களைச் சிறிதும் மதி யாமல் அவனுடைய அருமைக்குணங்களைப் புலப்படுத்திப் பாடினர்; அவ்வருமைச்செய்யுட்கள் புறநானூற்றிற் காணப்படும்; அவனிறந்த பின்பு, இவர், பிரிவாற்றாது மனமுருகிப் பலசெய்யுட்களாற்புலம்பி, அவன்புதல்வியரையழைத்துச்சென்றுமணஞ்செய்துகொள்ளும்படி இருங்கோவேள், விச்சிக்கோனென்பவர்களை வேண்டி மறுத்தமை கண்டு அவர்களை வெறுத்துப் பின்பு அம்மகளிர்க்கு மணஞ்செய்வித் துத் தம்முடைய நட்புக்கட்னைக்கழித்தனர். • பத்துப்பாட்டினுள் ஒன்றாகிய குறிஞ்சிப்பாட்டும் பதினெண் கீழ்க்கணக்கினுளொன்றாகிய இன்னாநாற்பதும் இவரியற்றிய நூல்கள். கக-ஆம் திருமுறையில் வந்துள்ள மூத்தநாயனார் திருவிரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவிரட்டைமணிமாலை, சிவபெருமான் திருவந்தாதியென்னும் பிரபந்தங்கள் மூன்றையும் அருளிச்செய்த கபிலதேவநாயனாரென்பவர் இவரேயென்று பெரியோர் கூறுவர். மேற்கூறிய திருவிளையாடற்புராணத்தில், இடைக்காடன் பிணக்குத்தீர்த்த திருவிளையாடல், கக-ஆம் திருவிருத்தத்தில், "எனை யந்தாதி சொன்னவன் கபிலன்" எனச் சிவபெருமான் கட்டளையிட் டருளியதாக வந்திருத்தலுங் காண்க. உஉக மேற்கூறியவற்றையன்றி இவரருளிச்செய்தனவாக பாடல்கள் இப்பொழுது கிடைக்கின்றன. அவற்றுள், அகவற்பாக் கள் கக்க: (நற்.20; குறுந். உகூ ; ஐங்குறு - க00. அகநா. கசு ; புறநா. 15.0. "நெட்டிலையிருப்பை" என்பது-க] வெண்பா க: [திருவள்ளுவ மாலையிலுள்ள, "தினையளவு என்பது] கலித் தொகையிலுள்ள கலிப்பாக்கள் உகூ இவருடைய செய்யுட்கள் மிக்க இனிமையையுடையன; பழைய களில் உதாரணமாகக்காட்டப்படும் 'கபிலரதுபாட்டு' என்னும் தொடர்மொழியே இதனை வலியுறுத்தும். வுரை