பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஏழாம் பத்து. ககரு (உ) நுடங்கவெனவும் (ச) உரறவெனவுநின்ற வினையெச்சங்களை (கா) நூறியென்னும்வினை யொடு முடிக்க. (அ) புகன்மறவரொடென்னும் ஒடுவை (ரு)வாளொடு (சு) வேலொடு (எ) மாவொடுவென எங்கும்கூட்டுக. • வாள், வேல், மாவெனநின் றமூன்றும் ஆகுபெயர். கூ. நூறியென்பது ஈண்டுக்கொன்றென்னும் பொருண்மைத்து. கூக0. பகைவர்கெடுகுடி பயிற்றியவென்றது படுபிணம்பிறங்கப் பகைவரை நூறிய பின் அப்பகைவருடைய கெட்டுப்போன குடிமக்களை அவர்நாட்டிலே பயின்று வாழ்வாராகப்பண்ணியவென்றவாறு. இனிப் பகைவருடைய கெட்டகுடிகளை வேற்றுநாட்டிலே பயிலப் பண்ணினவென்றுமாம். (கஉ) மன் றவென்பதனை (கக) அசைவில்கொள்கையராகலினென் பதனொடு கூட்டுக. உ.பொன்ஞாலமன்றி இம்மண்ஞாலமுழுதும் ஆண்டாரென்பது தோன்ற மண்கெழுஞாலமென் றஇச்சிறப்பானே, இதற்கு‘மண்கெழஞாலம்' என்று பெயராயிற்று. க௩. நிலம் பயம் பொழியவென்றது சிலர் அரசுசெய்யுங்காலங் களில் மழையும் நீரும் குறைவின்றியிருந்தும் எவ்விளைவும் சுருங்கவிளையுங் காலமும் உளவாம்; அவ்வா றன்றி நிலம் பயனைப்பொழிந்தாற்போல மிக விளையவென்றவாறு. சுடர் சினம் தணியவென்றது திங்கள் மும்மாரியும்பெய்து மழை இடையறாது வருகின்றமையின் சுடர் சினந்தணிந்தாற்போன்று தோற்ற வென்றவாறு. கச. வெள்ளியென்றது வறிது வடக்கிறைஞ்சிய (பதிற்றுப்பத்து, உச) என்றவா. சீர்சால்வெள்ளி பயம்கெழு ஆநியம் நிற்கவென்றது அவ்வெள்ளி மழைக்கு உடலான மற்றைநாள் கோள்களுக்குச்செல்கின்ற நல்லநாட்களிலேநிற்கவென்றவாறு. கரு. விசும்பு மெய் அகலவென்றது அம்மழையில்லாமைக்கு உற்பாத மாகிய தூமத்தோற்றமின்மையான், ஆகாயவெளி தன்வடிவு பண்டையில் அகன்றாற்போலத் தோன் றவென்றவாறு. பெயல் புரவு எ திரவென்றது மழை இவ்வுலகினை யானே புரப்பே னென்று ஏறட்டுக்கொண்டாற்போல நிற்பவென்றவாறு. க. நால்வேறு நனந்தலை ஓராங்கு நந்தவென்றது நாலுதிசையும் ஒன்றுபோலே பகையின்றி விளங்கவென்றவாறு. (கா) கொற்றவேந்தே, (கஎ) இலங்குகதிர்த்திகிரியினையுடைய நின் முன்னோர் (கஉ) நிச்சயமாக (கக) சின்னைப்போல் அசைவில்லாத மேற்