பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஒன்பதாம் பத்து ௩0 பெருந்தகைக் கமர்ந்த மென்சொற் றிருமுகத்து யரிவை காணிய வொருநாட் . மாணி ரிழை பூண்க மாளநின் புரவி நெடுந்தேர் முனைகை விட்டு முன்னிலைச் செல்லாது தூவெதிர்ந்து பெறா வுத் தாவின் மள்ளரொடு ஙரு தொன்மருங் கறுத்த லஞ்சி யரண்கொண்டு துஞ்சா வேந்தருந் துஞ்சுக .. விருந்து மாக நின்பெருந் தோட்கே. துறை - முல்லை. வண்ணம் - ஒழுகுவண்ணம். தூக்கு - செந்தூக்கு. பெயர் - (ககூ) நிழல்விடுகட்டி. ககூகூ கமஞ்சூல் - மேகங்கள்; நிறைந்த சூலுடைமையின், மேகங் கள் கமஞ்சூலெனப்பட்டன. ச. சிலையொடுகழறியென ஒடு விரிக்க;சிலை - முழங்குதல், கழறல்- இடித்தல். நிவந்து விசும்பு அடையூவென மாறிக்கூட்டுக; விசும்படைதல் - மலையிலேபடிந் தவை எழுந்து விசும்பை அடைதல். ரு.காலை இசைக்கும் பொழுதொடு புலம்புகொளவென்றது மேகங் கள் கார்காலத்தை அறிவிக்கின்ற பருவத்தானே வருத்தம் கொள்ளாநிற்க வென்றவாறு, முடிக்க. (ரு) புலம்புகொள (கூ) வயவர் (கச) வியலறைக்கொட்பவென க. வாயில் கொள்ளா மைந்தினரென்றது தமக்குக் காவலடைத்த டங்களைச் சென்று கைக்கொள்ளா வலியினையுடையவரென்றவாறு. வாயில் இடம். ஈண்டு, க0. மா இருங்கங்குலென்றது மிகவும் கரிய இராவென்றவாறு. (க0) கங்குலினும் (கச) கொட்பவென முடிக்க. கக. தோள் பிணி மீ கையரென்றது குளிராலே தோளைப்பிணித்த அத்தோள்மீது உளவாகிய கைகளையுடையாரென்றவாறு. கஉ. முடிதல்வேட்கையரென்றது தாம் எடுத்துக்கொண்ட போர் முடிதலிலே வேட்கையையுடையாரென்றவாறு. கரு. நாடு அடிப்படுத்தலிற் கொள்ளை மாற்றியென்றது நாட்டை அடிப்படுத்தினபடியாலே அடிப்படுத்தும் காலத்து உண்டாய்ச்சென்ற கொள்ளையை மாற்றியென் றவாறு.