பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஒன்பதாம் பத்து. கடுக (உச) தெய்வத்துக் கூட்டமுன்னிய (உரு) யாறென்றது அத்தெய் வம் கூடியுறை தலையுடைய அயிரைமலையைத் தலையாகக்கொண்டு ஒழுகப் பட்ட யாறென்றவாறு. தெய்வம் கூடியுறைதலையுடைய அயிரை தெய்வத்துக் கூட்டமெனப் பட்டது. உரு. இழிதந்தாங்கென்றது அவ்வியாறு மலையினின்று இழிந்தாற் போலவென்றவாறு. (உஎ) சிறப்ப (ஙஅ) விளங்குதியெனமுடிக்க. 5.0. பொறியென்றது உத்தம இலக்கணங்களை. பொறியொடு சாந்தமொடுவென ஒடுவை ரண்டற்கும் கூட்டியுரைக்க, ஒடு, வேறுவினை யொடு. ங்க. கோதையென்றது, முத்தாரத்தினை. (ஙக) சூடிச் சுமந்தென்னும் வினையெச்சங்களை (கூரு) வரையன்ன வென்பதனுள், அன்னவென்பதனாடு முடிக்க, (ஙஉ) விற்குலை இ (ஙச) வேங்கை விரிந்தென்னும் வினையெச்சங் களைத் திரித்து வில்குலவ வேங்கைவிரியத் (௩உ) திருமணிபுரையும் (௩௩) ருகெழுகருவிய பெருமழைசேர்ந்து (௩ச) விசும்புறு சேட்சிமை (கூரு) அருவியருவரையென மாறிக்கூட்டி, இதனைக் குறைவுநிலையுவமையில் வழு வமைதியாக்கிப் பொறிக்கு வேங்கைப்பூ உவமமாகவும் கோதைக்குத் திருவில் உவமமாகவும் பூணிற்கு அருவி உவமமாகவும் சாந்திற்கு உவமமில்லையாகவு முரைக்க. இவ்வாறு டர்ப்படாது வாளாதுமலையையுரைப்பினும் அமையும். ஙஅ. விளங்குதியென்பது ஈண்டு முன்னிலையேவல். ச0. உறுகால் எடுத்த புணரியெனக்கூட்டுக. (கச) பெரியோர் மருக, (கரு) மறங்கெழுகுருசில், (ககூ) கொங்கர் கோவே, (உ0) பொலந்தேர்க்குருசில், (உக) தொண்டியோர்பொருந, (உஉ) பெரும், (ஙசு) சேயிழைகணவ, (உ) நாடுகிழவோய், (நசு) எங்கு கிற்காண்கு வந்தேன்; (உஉ) நீ நீடுவாழ்வாயாக, (உசு) பலதாரம் (உஎ) கொளக் கொளக்குறையாமற் சிறப்ப (உக) மகளிர்நாப்பட் (௩அ) பன்னாள் ஞாயிறு போல விளங்குவாயெனமாறிக்கூட்டி வினை முடிவுசெய்க. இதனாற் சொல்லியது, அவன் கொடைச்சிறப்பும் காமவின்பச்சிறப் பும் உடன்கூறி வாழ்த்தியவாறாயிற்று. (பி - ம்.) உஎ. சிறந்து. (வுசூ) வானம் பொழுதொடு சுரப்பக் கானந் தோசுறு மடமா னேறுபுணர்ந் தியலப் புள்ளு மிஞிறு மாச்சினை யார்ப்பப் (அ)