பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கருக பதிற்றுப்பத்து. பெற்ற பெரும்பெயர் பலர்கை யிரீ இய கொற்றத் திருவி னுரவோ ரும்பல் உரு கட்டிப் புழுக்கிற் கொங்கர் கோவே மட்டப் புகாவிற் குட்டுவ ரேறே யெழா அத் துணைத்தோட் பூழியர் மெய்ம்மறை யிலங்குநீர்ப் பரப்பின் மரந்தையோர் பொருந வெண்பூ வேளையொடு சுரைதலை மயக்கிய ங0 விரவுமொழிக் கட்டூர் வயவர் வேந்தே யுரவுக்கட லன்ன தாங்கருந் தானையொடு மாண்வினைச் சாப மார்புற வாங்கி ஞாண்பொர விளங்கிய வலிகெழு தடக்கை வார்ந்துபுனைந் தன்ன வேந்துகுவவு மொய்ம்பின் ஙரு மீன்பூத் தன்ன விளங்குமணிப் பாண்டி லாய்மயிர்க் கவரிப் பாய்மா மேல்கொண்டு காழெஃகம் பிடித்தெறிந்து விழுமத்திற் புகலும் பெயரா வாண்மைக் காஞ்சி சான்ற வயவர் பெரும் ச0 வீங்குபெருஞ் சிறப்பி னோங்குபுக ழோயே கழனி யுழவர் தண்ணுமை யிசைப்பிற் பழன மஞ்ஞை மழைசெத் தாலுந் தண்புன லாடுந ரார்ப்பொடு மயங்கி வெம்போர் மள்ளர் தெண்கிணை கறங்கக் சுரு கூழுடை நல்லி லேறுமாறு சிலைப்பச் செழும்பல விருந்த கொழும்பஃ றண்பணைக் காவிரிப் படப்பை நன்னா டன்ன. வளங்கெழு குடைச்சூ லடங்கிய கொள்கை யாறிய கற்பிற் றேறிய நல்லிசை ரு0 வண்டார் கூந்த லொண்டொடி கணவ நின்னாள், திங்க ளனைய வாக திங்கள் யாண்டோ ரனைய வாக யாண்டே யூழி யனைய வாக வூழி வெள்ள வரம்பின வாகென வுள்ளிக்