பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஒன்பதாம் பத்து. றிருபெரு வேந்தரும் விச்சியும் வீழ வருமிளைக் கல்லகத் தைந்தெயி லெறிந்து பொத்தி யாண்ட பெருஞ்சோ ழனையும் வித்தை யாண்டவிளம் பழையன் மாறனையும் வைத்த வஞ்சினம் வாய்ப்ப வென்று வஞ்சி மூதூர்த் தந்துபிறர்க் குதவி மந்திர மரபிற் றெய்வம் பேணி மெய்யூ ரமைச்சியன் மையூர் கிழானைப் புரையறு கேள்விப் புரோசு மயக்கி யருந்திறன் மரபிற் பெருஞ்சதுக் கமர்ந்த வெந்திறற் பூதரைத் தந்திவ ணிறீஇ யாய்ந்த மரபிற் சர்ந்தி வேட்டு மன்னுயிர் காத்த மறுவில் செங்கோ லின்னிசை முரசி னிளஞ்சேர லிரும்பொறையைப் பெருங்குன்றூர்கிழார் பாடினார் பத்துப்பாட்டு.

(19 - LD) வம்மையூர் கிழான்; மேயூர் கிழான். கருஎ அவைதாம்: நிழல்விடுகட்டி, வினைநவில்யானை, பஃறோற்றொ ழுதி, தொழினவில்யானை, நாடுகாண்ெடுவரை, வெந்திறற்றடக்கை, வெண்டலைச் செம்புனல், கல்கால்கவணை, துவராக்கூந்தல், வலி கெழுதடக்கை ; இவை பாட்டின்பதிகம். . பாடிப்பெற்ற பரிசில்: மருளில்லார்க்கு மருளக் கொடுக்கவென்று உவகையின் முப்பத்தீராயிரங்காணம் கொடுத்து அவர் அறியாமை ஊரும் மனையும் வளமிகப்படைத்து ஏரும்இன்பமும் இயல்வரப்பரப்பி எண்ணற்கு ஆகா அருங்கலவெறுக்கையொடு பன்னூறாயிரம் பாற்படவகுத்துக் காப்பு நம் தான்விட்டான் அக்கோ. குடக்கோ இளஞ்சேரலிரும்பொறை பதினாறாண்டு வீற்றிருந் தான். ஒன்பதாம் பத்து முற்றிற்று.