பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பதிற்றுப்பத்து. நூலாக் கலிங்கம் வாலரைக் கொளீஇ வணரிருங் கதுப்பின் வாங்கமை மென்றோள் வசையின் மகளிர் வயங்கிழை யணிய வமர்புமெய் யார்த்த சுற்றமொடு. உரு நுகர்தற் கினிதுநின் பெருங்கலி மகிழ்வே. இதுவுமது. பெயர் (அ) மறம் வீங்கு பல்புகழ். எ துயிலீயாதென்பது துயிலாதென்னும் வினைத்திரிசொல்; துயி லாமலெனத்திரிக்க; இனித் திரியாது, 'யாறுநீரொழுகாதுகிடந்தது' என் னும் வழக்குப்போல இடத்துநிகழ்பொருளின் தொழிலை இடத்திற்கேற்றி மாதிரமானது அரசுதுயிலீயாது பனிக்குமென அம்மாதிரத்தின் வினையொடு முடிப்பினும் அமையும். அ. மறம் வீங்கு பல்புகழென்றது அரசர்க்குச்சிறந்த மறப்புகழ் மற் றைப்புகழினும் மிக்க பல்புகழென்றவாறு. யிற்று. இச்சிறப்பானே இதற்கு 'மறம்வீங்குபல்புகழ்' என்று பெயரா அ -கூ நின்செல்வம் இனிது; யாது இனிதெனிற் பல்புகழ் கேட்டற்கு : இனிதென முடிவுகொள்க. Fo. உக. கேட்டொறுமென்பதற்கு அச்செல்வத்தையென வருவிக்க. நூலாக்கலிங்கமென்றது ஒருவர் நூலா நூலாகிய பட்டு நூல் முதலாயவற்றாற்செய்த கலிங்கமென்றவாறு. நூலாமையென்னுந்தொழில் கலிங்கத்துக்குச் சினையாகிய நூல்மேல தாலெனின், அச்சினையோடுமுதற்குள்ள ஒற்றுமைபற்றிச் சினை வினையை முதல் மேலேற்றி வழுவமைதியாற் கூறினானென்க. இனி நூலா நூற்கலிங்க மென்பான் நூலென்பதனைத் தொகுத்துக் கூறினானென்பாருமுளர். உரு. நுகர்தற்கு இனிது நின் பெருங்கலிமகிழ்வேயென்றது. நின் பெரிய ஆரவாரத்தையுடைய ஓலக்கத்துச்செல்கின்ற வினோதமகிழ்ச்சி அனு பவித்தற்கு இனிதென்றவாறு, (ங) வேந்தே, (கூ) நின்செல்வம் (அ) புகழ் (க) கேட்டற்கினிது; (உரு) நின்பெருங்கலிமகிழ்வு நுகர்தற்கினிதென வினை முடிவுசெய்க. இதனாற்சொல்லியது, அவன்வென்றிச்சிறப்பும் அவனது இலக்க வினோதச்சிறப்பும் உடன் கூறியவாறாயிற்று. (பி - ம்.) ரு. சோலைப்பிறமான். கக. இழைப்வாடுநடை. (e)