பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கணபதி துணை முகவுரை. "சந்தனப் பொதியத் தடவரைச் செந்தமிழ்ப் பரமா சாரியன் பதங்கள் சிரமேற் கொள்ளுதுந் திகழ்தரற் பொருட்டே.' பதிற்றுப்பத்தென்பது, தமிழ்ப்பாஷையிலுள்ள பழைய இலக் கிய நூல்களுள்ளே நல்லிசைப்புலவர்களருளிச்செய்த சங்கச்செய் யுட்களாகிய சட்டுத்தொகைகளில் நான்காவது; புராதன இலக்கண இலக்கியவுரைகளில் மேற்கோளாக எடுத்துக்காட்டப்பெற்ற பெருமை வாய்ந்தது; முடியுடை வேந்தர்களாகிய சேரர்பதின்மர்கள் மீது சங்கப்புலவர் பதின்மர்கள் இயற்றியது; ஐந்திலக்கணங்க ளுள்ளே பொருளின் பகுதியாகிய புறத்திணைத்துறைகளுக்கு இலக்கியமாக அமைந்துள்ளது. பப்பத்து அகவற்பாக்களுள்ள பத்துப்பகுதிகளால் தொகுக்கப் பட்டமையின், இந்நூல் பதிற்றுப்பத்தென்று பெயர்பெற்றது. இந்நூலிலே தமிழ்நாட்டின் பண்டைக்கால நிலைமையும், சில சேரர்கள், சில குறுநில மன்னர்கள் முதலியோருடைய வரலாறு களும், அவர்களுடைய அரசாட்சி, வீரம், கொடை, புலவர்களை அவர்கள் ஆதரித்துவந்த அருமை முதலியனவும், சேரநாட்டின் பழைய வழக்கங்கள் சிலவும், இக்காலத்து வழங்காத சில அரும்பதங்களும், வேறு சில அரிய விஷயங்களும் காணலாகும். கிடைத்த இந்நூற்கையெழுத்துப்பிரதிகளுள் ஒன்றிலேனும் கடவுள்வாழ்த்தும் முதற்பத்தும் பத்தாம்பத்தும் அவற்றின் உரையும் காணப்படவில்லை; உள்ள எட்டுப்பத்திலுங்கூடச் சிலசில விடத்து மூலங்கள் குறைந்தும் உரைகள் சிதைந்தும் பிறழ்ந்தும் இருக்கின்றன. அந்தவிஷயத்தில் நான் செய்யக்கூடியது யாதொன்றுமில்லாமையால், அவை இருந்தவாறே பதிப்பிக்கப் பெற்றன.

  • இவற்றின் வரலாற்றைப் புறநானூற்றின் முகவுரையிற் காண்க. "பதிற்றுப்பத்தென்பது இற்றுச்சாரியை வந்தது

எழுத்து. உஉ - உசை (நேமிநாதம்,