________________
மூன்றாம் பத்து. (உக) சொற்பெயர் நாட்டங் கேள்வி நெஞ்சமென் றைந்துடன் போற்றி யவை துணை யாக வெவ்வஞ் சூழாது விளங்கிய கொள்கைக் காலை யன்ன சீர்சால் வாய்மொழி ரு யுருகெழு மரபிற் கடவுட் பேணியர் கொண்ட தீயின் சுடரெழு தோறும் விரும்புமெய் பரந்த பெரும்பெய ராவுதி வருநர் வரையார் வார வேண்டி விருந்துகண் மாறா துணீஇய பாசவ க0 ரூனத் தழித்த வானிணக் கொழுங்குறை குய்யிடு தோறு மானா தார்ப்பக் கடலொலி கொண்டு செழுநகர் நடுவ ணடுமை யெழுந்த வடுநெய் யாவுதி யிரண்டுடன் கமழு நாற்றமொடு வானத்து கரு நிலைபெறு கடவுளும் விழைதகப் பேணி யார்வளம் பழுனிய வையந்தீர் சிறப்பின் மாரியங் கள்ளின் போர்வல் யானைப் போர்ப்புறு முரசங் கறங்க வார்ப்புச்சிறந்து நன்கலந் தரூஉ மண்படு மார்ப் 20 முல்லைக் கண்ணிப் பல்லான் கோவலர் புல்லுடை வியன்புலம் பல்லா பரப்பிக் கல்லுயர் கடத்திடைக் கதிர்மணி பெறூஉ மிதியற் செருப்பிற் பூழியர் கோவே குவியற் கண்ணி மழவர் மெய்ம்மறை உரு பல்பயந் தழீஇய பயங்கெழு நெடுங்கோட்டு நீரறன் மருங்கு வழிப்படாப் பாகுடிப் பார்வற் கொக்கின் பரிவேட் பஞ்சாச் சீருடைத் தேஎத்த முனைகெட விலங்கிய நேருயர் நெடுவரை யயிரைப் பொரும்