பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

Jr. நான்காம் பத்து. சகூ வரம்பில் வெள்ள மென்றது அதனோடுகூடி நாட்டுள்ளுச் சென்றுவிடும் பேரணிப் பெரும்படையை. கரையையுடையகடலை வரம்புடைய வெள்ளமென்றாக்கி இதனை வரம்பில்வெள்ளமென்று கூறிய சிறப்பான், இதற்கு 'வரம்பில்வெள்ளம்' என்று பெயராயிற்று. வெள்ளமென மகரவொற்றுக் கெடாமையான் இருபெயரொட்டுப் பண்புத்தொகையன்றி ஒருபொருளாக இருபெயர் நின்ற றதாக்கிக்கொள்க. - கக, படை வெள்ளத்தை ஆரெயிலென்றது அரசன் றனக்கு ஆரெயில்போல அரணாய் நிற்றலினெனக்கொள்க. இனிக் கல்வழங்காரெயிலெனக் காற்றல்லது வழங்கா ஆரெயிலென்று பகைவர்மதிலாக்கி, அதனை வரம்பில்வெள்ளம் கொள்ளக்கருதினென்று உரைப்பாருமுளர். .உயர்த்தென்பதனை உயர்த்தவெனத்திரித்து, அதனை (க)எஃகம் வளை இயவென்பதெனொடு முடிக்க. (கூ) செவ்வாயெஃகம்வளை இய அகழினையும் (அ) வில்விசை யுமிழ்ந்த அம்பாகிய வைம்முள்ளினையுமுடைய (கக) ஆரெயிலென மாறிக் கூட்டுக. கூ.செவ்வாயெஃகமென்றது கூர்வேற் கருவிகளையெனக்கொள்க. முனைமுகத்திற்செல்லாதொழிந்த இனி, வாள் மதிலாகவென்றுவைத்துப் பின்னை ஆர் எயிலென் றது, வாண்மதிலை சூழ்தலையுடைய ஆராகிய எயிலினையெனக் கொள்க; ஈண்டு காலாள் வழங்கிச்செல்கின்றபடையின் திரட்சி. இனி வரம்பில் வெள்ளமானது வாள் மதிலாக வேல்மிளை உயர்த்துக் கால்வழங்கு ஆர் எயிலாதலைக் கருதினென்றலுமொன்று. ஆராவது (க) அண்ணல், இது பெரிதும் இறும்பூதாயிருந்தது; யாதெனின், (சூ) வரம்பில்வெள்ளம் (க) கால் வழங்காரெயிலெனச் சொல்லப்பட்ட நின்படை போர்செய்யக்கருதின், (கஉ) நின்னோடு போரெதிர்ந்த வேந்தர் பொரமாட்டர்து நின்னை நீங்குவர்; இஃது அதுவென வினை முடிவு செய்க. இதனாற்சொல்லியது, அவன்வென்றிச்சிறப்புக் கூறியவாறாயிற்று. வரம்பில்வெள்ளங்கருதினென எடுத்துச்செலவினை மேலிட்டுக் கூறின்மையான், வஞ்சித்துறைப்பாடாணாயிற்று. ௩. 'கடிமரத்தான்' என்றதுமுதலாக மூன்றடிவஞ்சியடியாக வந்த மையான், வஞ்சித்தூக்குமாயிற்று. 7 (2)