பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ருஅ பதிற்றுப் பத்து. கள் பெருகக்கூட்டிற் களிப்புமிகுமென்று அவை அளவேகூட்டின அரிய லென்றவாறு. ககூ தானென்பதனைச் (கசு) சேரல்தானெனக்கூட்டித் தரவுண்ட வென்பதனை வரையாது கொடுத்தற்பொருட்டு உண்டவெனவுரைக்க. இனி இதற்குப் பிறவாறு உரைப்பாருமுளர். உஎ. தோட்டி நீவாமலெனத்திரிக்க. உக. காடு தலைக்கொண்ட சுடரெனக்கூட்டுக. நாடுகாணுவீர்சுட ரென்றது நாடெல்லாம் நின்று காணும்படி நின்றெரிகின்ற விளங்கினசுடரெ ன்றவாறு இச்சிறப்பானே, இதற்கு 'நாடுகாணவீர்சுடர்' என்று பெயராயிற்று. உகூ - ௩O. சுடாழலென்றதனைச் சுடர்போலும் அழலென உவமத் தொகையாக்கி அழலை அந்தயானையின் சீற்றத்தீயாக்குக. மரீஇயவென்றது அவ்வாறு அழல்விட்டும் பாகரேவலொடு மரீஇயவென்றவாறு. (கச) சேரல் (ககூ) தான் (உ0) நேரியோன்; (உச) இளையர் (உசு) களம் வாழ்த்த (உ௩) மகளிர் (உஉ) மலர்ந்தவேங்கையின் இழையணிந்து (உங) நலஞ்சிறப்பப் (உச) பாணர் பூமலைய (ஙக) யானையைப் பல நல்கு வான்; ஆனபின்பு (உக) விறலி, நீ செல்லாயோவெனக்கூட்டி வினைமுடிவு செய்க. இதனாற்சொல்லியது, அவன் கொடைச்சிறப்புக் கூறியவாறாயிற்று. (பி - ம்) க0. வெண்டோடு நிரைத்த உஎ. தோட்டி நிவந்து. உக. செல்லா மோதில். (0) இதன்பதிகத்துக் கடம்பின்பெருவாயிலென்றது, அந்நன்னனூரை, நிலைச்செருவென்றது, அந்நன்னன் நாடொறுஞ்செய்தபோரினை. (பதிகம்) ஆராத் திருவிற் சேர லாதற்கு வேளாவிக் கோமான் பதுமன் றேவி யீன்ற மகன்முனை பனிப்பப் பிறந்து பல்புகழ் வளர்த் தூழி னாகிய வுயர்பெருஞ் சிறப்பிற் பூழி நாட்டைப் படையெடுத்துத் தழீஇ யுருள்பூங் கடம்பின் பெருவாயி னன்னனை நிலைச்செருவி னாற்றலை யறுத்தவன் பொன்படு வாகை முழுமுத றடிந்து குருதிச் செம்புனல் குஞ்சர மீர்ப்பச்