________________
எ பதிற்றுப் பத்து. உக. மணியிமைப்புப்போலுமின்னுக்கு மணியிமைப்பென்பது பெய ராயிற்று. வேலிடுபென்றது வேலை ஏற்றி நடப்பித்தென்றவாறு, ௨௨. கடன்மறுத்தலென்றது, கடலிற்புக்கு ஒருவினை செய்தற்கு அரிதென்பதனை மறுத்தலை. (சா) சேரல், (உஉ) கடன்மறுத்திசினோராகிய (கஎ) தானை மன்னர் (கஅ) இனி யாருளரோ, நின்முன்னுமில்லையெனக் கூட்டி வினைமுடிவு செய்க. இதனாற்சொல்லியது, அவன் வென்றிச்சிறப்புக்கூறியவாறாயிற்று. (ரு) (சசு) இழையர் குழையர் நறுந்தண் மாலையர் சுடர்நிமி ரவிர்தொடி செறித்த முன்கைத் திறல்விடு திருமணி யிலங்கு மார்பின் வண்டுபடு கூந்தன் முடிபுனை மகளிர் ரு தொடைபடு பேரியாழ் பாலை பண்ணிப் பணியா மரபி னுழிஞை பாட வினிதுபுறந் தந்தவர்க் கின்மகிழ் சுரத்தலிற் சாம்பல கடவுங் கரைவாய்ப் பருதி யூர்பாட் டெண்ணில் பைந்தலை துமியப் க0 பல்செருக் கடந்த கொல்களிற் றியானைக் கோடுநரல் பௌவங் கலங்க வேலிட் டுடைதிரைப் பரப்பிற் படுகட லோட்டிய வெல்புகழ்க் குட்டுவற் கண்டோர் செல்குவ மென்னார் பாடுபு பெயர்ந்தே. இதுவுமது. பெயர் - (அ) கரைவாய்ப்பருதி. (க) இழையர் குழையர் மாலையராகிய (ச) மகளிரெனக் கூட்டுக. பிற ஒளியிற் றிறலுடைமையான்; இவ்வொளிக்கு ஆகுபெய ரால் திறலென்றுபெயராயிற்று. 15. எ இன்மகிழ்சுரத்தல் - இனியமகிழ்ச்சியைச் சுரத்தல்.. இதனாற்பயன் முற்கூறிய புறந்தருதலாகிய கொடையோடே களை மயக்கிய முகனமர்தலுமுடையனென்றவாறு. அ சூரம்பலவென்றது பகைவரொடு இவா பொருங்களத்தில் தேர் செலுத்தற்கு அரிதாம்படி படையொடுவிலங்கும் அரியஇடங்கள் பலவற் றினுமென்றவாறு.