________________
எ௨ பதிற்றுப்பத்து. அவ்வழகினை நுதன்மேலிட்டுக் கூறியவா ற்றான், இதற்கு 'நன்னு தல்விறலியர்' என்று பெயராயிற்று. அ. தொன்னகர் அரசுடைய பழையநகரிகள். (ரு) நெய்வழிபு உராலிற் (சூ) சுடரழல் (எ) ஆடுமென்றதனாற் சொ ல்லியது; அந்த நகரிகளது செல்வமுடைமை. (க) குட்டுவன் அட்டு ஆனான் ; அடுதொறும் (உ) பரிசிலர் களிறு பெற்று ஆனார் ; (அ) தொன்னகர் வரைப்புக்களில் அவன் வெனக்கூட்டி வினைமுடிவு செய்க. உரை ஆனா இதனாற்சொல்லியது, அவன் கொடையினையும் அக்கொடைக்கு வருவாயாகிய பகைவரைக்கோறலையும் உடன்கூறியவாறாயிற்று. (சவு.) பைம்பொற் றாமரை பாணர்ச் சூட்டி யொண்ணுதல் விறலியர்க் காரம் பூட்டிக் கெடலரும் பல்புகழ் நிலைஇ நீர்புக்குக் கடலோ டுழந்த பனித்துறைப் பரதவ வாண்டுநீர்ப் பெற்ற தார மீண்டிவர் கொள்ளாப் பாடற் கெளிதினி னீயுங் கல்லா வாய்மைய னிவனெனத் தத்தங் கைவ விளையர் நேர்கை நிரைப்ப வணங்கிய சாயல் வணங்கா வாண்மை க0 முனைசுடு கனையெரி யெரித்தலிற் பெரிது மிதழ்கவி னழிந்த மாலையொடு சாந்துபுலர் பல்பொறி மார்பநின் பெயர்வா ழியரோ நின்மலைப் பிறந்து நின்கடன் மண்டு மலிபுன னிகழ்தருந் தீநீர் விழவிற் கரு பொழில்வதி வேனிற் பேரெழில் வாழ்க்கை மேவரு சுற்றமோ டுண்டினிது நுகருந் தீம்புன லாய மாடுங் காஞ்சியம் பெருந்துறை மணலினும் பலவே. துறை - இயன்மொழிவாழ்த்து. வண்ணமும் தூக்கும் அது. பெயர் - (கரு) பேரெழில்வாழ்க்கை. நிலைஇயென்றது நிலைப்பித்தென்னும் பிறவினை. (எ)