பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறாம் பத்து. ஙு மெஃகுடை வலத்தர்நின் படைவழி வாழ்நர் மறங்கெழு போந்தை வெண்டோடு புனைந்து நிறம்பெயர் கண்ணிப் பருந்தூ றளப்பத் தூக்கணை. கிழித்த மாக்கட் டண்ணுமை கைவ லிளையர் கையலை யழுங்க ஙரு மாற்றருஞ் சீற்றத்து மாயிருங் கூற்றம் வலைவிரித் தன்ன நோக்கலை கடியையா னெடுந்தகை செருவகத் தானே. துறை - வஞ்சித்துறைப்பாடாண்பாட்டு வண்ணம் ஒழுகுவண்ணமும் சொற்சீர்வண்ணமும் தூக்கு - செந்தூக்கும் வஞ்சித்தூக்கும். பெயர் - (அ) வடுவடுநுண்ணயிர். ஙு குடபுலமென்றது தன் நகரிக்கு மேல்பாலாம். அக (ரு) மாச்சினைச்சேக்கும் (கூ) பொழில், (சு) வண்டு இறைகொண்ட (க) பொழில்,(எ) அடைகரைப் (க) பொழிலெனக்கூட்டுக. அ. வடுவையடுதல் - வடுவைமாய்த்தல். ஊதை உஞற்றுதல் - அவ் ஓடுமாயும்படி நுண்ணிய அயிரை முகந்து தூவுதலிலே முயல்கை. அயிர் - நுண்மணல், வடுவைமாய்க்கும் நுண்ணயிரெனற்பாலதனை வடுவடு நுண்ணயி ரென்று கூறியசிறப்பானே, இதற்கு 'வடுவடுநுண்ணயிர்' என்று பெயரா யிற்று. க. பொழிற்கண் ஒப்பனையாற் பொலிவுபெற்றென் றவாறு. க0. இயலுதல் - உலாவுதல். ஒல்குதல் - அசைதல். கக. வெறியுறு நுடக்கம்- இயல்பாக நுடங்கலன்றித் தெய்வமேறிய விகாரத்தால் நுடங்குதல். . ககூ. அரவழங்குதல் : அரவாடுதல். கக-ங. வெறியுறு நுடக்கம்போல அரவழங்குமெனக் கூட்டுக. (கங) அரவழங்கும் (கஉ) பெருமலைப் (கங) பெருந்தெய்வமென மாறிக்கூட்டுக. கஉ. பெருமலை - இமயம். (கரு) குண குட கடலெனக் கிழக்கும் மேற்கும் எல்லை பின்கூறு கின்றமையான், (கச) வளைநரலும் பனிப்பௌவமென்றது தென்னெல்லை யாம். 11