பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/101

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
98


தன்னைக் கட்டுகிற கொட்டத்தில் – கட்டுத்தறி – புல் – இதுகளையெல்லாஞ் சேறாக்கி – கட்டிப் புல் போட வந்த தன் எஜமானனுக்குஞ் சேறு பூசி வைப்பது போலக் கிடைத்த உத்தியோகத்தில் பண ஆசையினால் லஞ்சம் வாங்க ஆரம்பித்துத் தங்களுடைய பேர்களையும் துரைத்தனத்தார்களுடைய பேர்களையும் கெடுப்பதுமல்லாமல் அநேக அக்கிரமங்களுக்கு உட்பட்டு அநேக ஜனங்கள் அநியாயமும் துன்பமும் நஷ்டமும் அடையும்படி செய்து வருகையால் அவைகளைப் பல விவகாரங்களிலும், அவரவர் நடத்தைகளிலுமறிந்தும் அனுபவமுடைய அநேகராலும் நொந்தவர்களாலும் சொல்லக் கேட்டும் உணர்ந்தவனா யிருக்கிறேன்.

இந்த நாடகத்தில் பாடல்களுக்கிடையில் உள்ள உரைநடைப் பகுதிகள் சிலவற்றால் உரைநடை பற்றியும் நாட்டு நிலை பற்றியும் அறிகின்றாேம்.

(1) ௬வது பக்கம், ௫ வது வரியில் சேர வேண்டிய நோட்டு,

குடிகளுடைய சவுக்கியத்துக்காகக் குடிகிணறுகளை மராமத்துச் செய்யச் சர்க்காரில் ௫௰–௬௰ ரூபாய் கொடுத்த போதிலும் வீட்டுக்கொரு ஒட்டன் வெட்டிக்கு வந்து வேலை செய்து போகிறதுண்டு. ௲௮௱௪௰௪ ஆகஸ்டு ௴ ௮௨ ரிவின்யூ போர்ட்டு சர்க்கியுலர் உத்தரவினால் கூலிக்காரரைப் பலவந்தமாகப் பிடித்து வேலைவாங்கிவரும் வாடிக்கையை நிறுத்தக் கட்டளை. ௲௮௱௪௰௨ ௵ மே ௴ ௯௨ உத்தரவினல் தண்டு சரபராவுக்கு வண்டிக்காரரைத் தொந்தரவுபடுத்தக் கூடாது. வாடகை சரியாயும் தாமசமில்லாமலும் பட்டவாட செய்யக் கட்டளை.

(2) ௮-வது பக்கம், ௰௪-வது வரியில் சேரவேண்டிய நோட்டு, ௲௮௱௫௰௬ ௵ மே ௴ ௪௨ ரிவினியு போர்ட்டு சர்க்கியுலர் உத்தரவினால்