பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/106

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
103

நகராட்சி முதலிய பல துறைகளைப் பற்றியனவாக உள்ளன. பொதுவாகச் சென்ற நூற்றாண்டில் எல்லாத்துறைகளிலும் அரசாங்கத்தார் ஆங்கிலத்தில் மட்டுமன்றித் தமிழிலேயும் எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர் என்பது தெளிவு.

(1) சட்டநூல் முன்னுரை: 1882 ஆம் ௵த்திய 8வது ஆக்டினால் திருத்துபாடான இந்திய பீனல் கோடானது 1883ம் ௵ ஐனவரி ௴ 12௳ முதல் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது.

அப்போதைக்கப்போது ௸ ஆக்டை திருத்துவதற்குண்டான 1870ம் ௵த்தில் 27வது ஆக்ட் 1872ம் ௵த்தில் 19வது ஆக்ட் 1882ம் ௵த்திய 8வது ஆக்ட்டுகளும் இந்தப் பதிப்பில்......

(2) 1835 ௵த்து பதினேழாவது ஆக்டு என்னும் சட்டம் (தமிழில்)

1835 ௵ ஆகஷ்டு ௴ 17ம் ௳ ஆலோசனை சபையால்-ஈந்தியாவின் ஆனரபில் கவர்னர் ஜெனரலவர்களாலே விதிக்கப்பட்டது.

௲௮௱௨௰௫ம்௵ செப்டம்பர் ௴ ௧௨ முதற் கொண்டு கம்பெனியாருடைய தேசங்களுக்குள்ளேயிருக்கப்பட்ட தங்கச்சாலைகளில் அடியிற் சொல்லியிருக்கிற வெள்ளி நாணயங்கள் அச்சடிக்கப்படுமென்று விதிக்கப்பட்டது—ருபாயானது – கம்பெனியாருடை ரூபாயென்று சொல்லப்படும் அரை ரூபாய்–கால் ரூபாய்–இரட்டை ரூபாய்–சொன்ன ரூபாய் ௱௮௰ கிரெயின்ஸ் திராய் நிறையுள்ளதுமாய் அடியிற் சொல்லியிருக்கிறபடி மாற்றுள்ளதுமாயிருக்க வேண்டியது.