பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/119

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
116


இவ்வாறே பெண்கள் மலடாக உள்ளனரா, ஆண்கள் மலடாக உள்ளனரா என்பதை அறியச் ‘சிற்றின்பச் சிரோன்மணி’ என்ற வசன நூலில் வழிவகுத்துள்ளனர். இந்நூல் ‘வ. உ. சி.’ அவர்களால் அவர்தம் தொடக்க காலத்தில் எழுதப்பட்டதாம். இந்த முறை இன்றுள்ள பல டாக்டர்கள் அறியாத ஒன்றாகும்.

சிற்றின்பச் சிரோன்மணி நூல்:-ஆண் பெண்ணிருவரில் மலடர் இன்னார் என அறியும் தந்திரம் மொச்சை விரையை இரண்டு பாத்திரங்களிற் போட்டு, புருஷனுடைய சிறுநீரை ஒரு பாத்திரத்திலும் ஸ்திரீயினுடைய சிறுநீரை ஒரு பத்திரத்திலும் தனித்தனி விட்டு வந்து 5 தினத்திற்குப் பிறகு யாருடைய நீர்விட்ட கொட்டை முளைக்கவில்லையோ அவர்களை மலடென்று கண்டு தகுந்த சிகிச்சை செய்ய வேண்டியது. இவ்வாறே சுரைக்கொடிப் பயிரிலும் திருஷ்டாந்தங் காணலாம். ஆனால் ஒரு நீர் விட்டு ஒரு மாதம் கழிந்த பின்னர்தான் மறு நீர் விட்டுப் பார்க்க வேண்டும். வெவ்வேறு கொடிகளானால் ஒரே காலத்தில் பக்ஷீக்கலாம்.

இதுபோன்ற பலப்பல வகையான கருத்துக்கள் சென்ற நூற்றாண்டில் வெளியான தமிழ் உரைநடை நூல்களின் வழி நமக்கு விளங்குகின்றன.

இவை மட்டுமன்றிச் சாட்சிகள் பற்றிய ‘ருஜு சாஸ்திர சங்கிரகம்’, குடும்பத்தில் மக்கள் வாழ வேண்டிய வகை பற்றிய 'இல்லத் தோழன்’ (1845), போலீஸ் நடந்து கொள்ள வேண்டிய முறை பற்றிய 'போலீஸ் நிபுணன்’ (1894) முதலிய பல நூல்கள் ஒவ்வொரு துறைக்கும் எடுத்துக் காட்டாகவும் விளக்கங்களாகவும் அனைவரும் எளிதில் உணர்ந்து கொள்ளும் வகையிலும் எழுதப் பெற்றுள்ளன. ஆசிரியத் தொழிலியற்றுவோருக்கு உதவி செய்யும் வகையில் பல நூல்களும் எழுதப்பெற்றுள்ளன.